
இரண்டுமே பொய் என்றால், முதலில் சொன்னது போல இரமணரின் வழிக்கு சேதமில்லை, ஆனால் கிறித்துவம் குப்பையில் சேரும். இரண்டுமே உண்மை என்றால், இந்த அற்புதம் கிறித்துவத்துக்கு மட்டுமே உரித்தது அல்ல, ஆக கிறித்துவின் வழி மட்டுமே வீடு பெற வழி என்னும் கிறித்துவ வாதம் பெரும் பொய் என்று ஆகும்… கிறித்துவத்திற்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, கிரியை, சரியை, யோகம் சார்ந்த கலைகள் என்றோ எதுவும் கிடையாது. எல்லாமே பிறரிடம் சுரண்டிய சரக்கு தான். ஏன் கிறிஸ்துமஸ் கூட திருடிய கொண்டாட்டம் தான். ‘பாவிகளே’ என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. ஆக, முழுதும் இயேசுவின் அதிசய பிறப்பு இறப்பு மீட்பு என்பதை மட்டுமே சார்ந்த மதம். அது அவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பட்ட அதிசயம் இல்லை என்றானால் ‘டப்பா டான்ஸ் ஆடிவிடும்’, ஆகவே தான் இளையராஜாவின் அந்த பதிலுக்கு இத்தனை எதிர்ப்பு…