Posts Tagged ‘ இஸ்ரேல் ’

அந்த ஆறு முகங்கள்

இந்த ஆறுமுகக் காதல் சாதாரண காதலா என்ன? நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.. ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம்... போர்க் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர்? செறுநர் உடன். கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.. கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு!.. பாரதத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மற்றொரு ஆன்மிக இணைப்பாக... [மேலும்..»]

70 ஆண்டுகள் காத்திருந்த இனிய நட்பு!

இந்தப் பயணத்தின் மூலம் இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். அவரை வரவேற்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்... உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொண்டு செயல்படும் அரசுத் தலைமை இந்தியாவில் உருவாக நமக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது... [மேலும்..»]

ஓர் இதழியல் கனவு…

September 11, 2015
By
ஓர் இதழியல் கனவு…

. ஒரு பத்திரிகை செய்தியுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்தபோது, அவரது உடலை நல்லடக்கம் செவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தார் கணேசன் என்ற தொழிலாளி. கபரிஸ்தானில் குழி தோண்டுவது தான் அவரது தொழில். ஊரெல்லாம் கலாமின் புகழ் பாடிக் கொண்டிருந்தபோது, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் தில்லி பதிப்பில், கலாமின் உடல் நல்லடக்கத்துக்காக குழி தோண்டிய தொழிலாளியின் நேர்காணல் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. யாரும் அறியாத, அடையாளமற்ற ஒருவரின் நேர்காணல் முக்கியமான நாளிதழில் முதல் பக்கம் வந்தது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதே போன்ற ஒரு நிகழ்வு அமெரிக்காவிலும்... [மேலும்..»]

மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்

இப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது... மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது... முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா... [மேலும்..»]

இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்

ஹாமஸ் துவங்கப்பட்ட போது, அதன் நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டது - முதலாவதாக, மேற்குக் கரை, காஸா உட்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது, இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. இரண்டாவதாக, தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்பட வேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது, பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக மாற்றுவது... துப்பாக்கி தூக்குவதற்கும், கார் வெடி குண்டுகள், சொந்த ராக்கெட் என அதிநவீனத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. பதினொரு வழிகளில் ஹமாஸூக்கு தேவையான... [மேலும்..»]

பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!   உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை   வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உலகின் அறிவிக்கப்படாத காவல்காரனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு சர்வதேச அரசியலில் முதன்மைப்படுத்திக்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக  கம்யூனிஸ நாடுகள் மேற்கொண்ட உலகளாவிய முயற்சி வெற்றி பெறவில்லை. தவிர, 1990களில் நிகழ்ந்த கம்யூனிஸத்தின் தோல்வி முதலாளித்துவத்தை அடைப்படையாகக் கொண்ட அமெரிக்காவின்... [மேலும்..»]

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன? [மேலும்..»]

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது. [மேலும்..»]

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4

January 30, 2010
By

பங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால். [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey