Posts Tagged ‘ இஸ்லாமிய ஆட்சி ’

தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்

வரலாற்றுக்கு கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று பாகுபாடு கிடையாது.. அகழ்வாய்வில் 50 க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. தூண்களின் பூர்ண கலசமே அவை இந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான். இதற்கு பிறகான 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 263 க்கும் மேற்பட்ட நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள் , துவார பாலகர்கள் என்று இந்து ஆலய லட்சணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டு நீதி மன்றத்திலும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 1975-76 ல் நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்விலேயே... [மேலும்..»]

அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!

நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும்... அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர்... [மேலும்..»]

தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்

யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார்... மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது. குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை... [மேலும்..»]

இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து

எனக்கு இந்தியா பெரும் மனக்காயம் அளித்தது. இந்தியா ஒரு போற்றிப் புகழப்பட்ட நாயகமான நாடு. அதே நாட்டின் பெரும் வறுமையிலிருந்துதான் என் முன்னோர்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் தப்பித்து வெளியே ஓட வேண்டியிருந்தது. இந்த இரண்டு இந்தியாக்களும் வெவ்வேறாக இருந்தன.. என் சிறுவயதில் சரியான வார்த்தை தெரியாவிட்டாலும் இந்தியாவின் ‘பூரணத்துவம்’ (wholeness) என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஸ்பானியப் படையெடுப்பாளர்கள் முன்னால் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் எப்படி ஒன்றுமே இல்லாமல் போனதோ அதுபோல் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் முன்னால், இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்த எங்கள் காலனியில் பழமையானதும், சிதைந்து போகாததென்றும் நினைத்து நாங்கள் பல்வேறு விதமாக... [மேலும்..»]

பாகிஸ்தானின் மத அரசியல்

பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு... பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது. பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு... விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியே வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம்.... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 18

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.   << தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> தொடர்ச்சி… அக்பர் கலைகளையும், இலக்கியங்களையும் ஆதரித்த சிறந்த அரசர் என நமது வரலாற்று நூல்கள் கூக்குரலிடுகின்றன. அதனையெல்லாம் விடவும் அக்பரின் அவையை அலங்கரித்த அற்புதமான ஒன்பது “நவரத்தினங்கள்” அவரது புகழைப் பறைசாற்றுவதாக இருப்பதாக நம்மையெல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் அதற்கு முற்றிலும் எதிரான உண்மைகளைச் சொல்லுகின்றன. அந்த “நவரத்தினங்கள்” அத்தனைபேரும் ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமற்ற, அக்பரை முகஸ்துதி செய்து பிழைக்கிற கைக்கூலிகள் என்பதே உண்மை. வெளித் தோற்றத்திற்கு அக்பர் அவர்களை மதிப்பது போலத்... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 17

பதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது... இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 16

வரலாற்றாசிரியர் பதாயுனி அக்பரின் படையில் ஒரு சாதாரண சிப்பாயாகப் பணிபுரிந்தவர். ராணா பிரதாப்புக்கு எதிராக நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போரில் பங்கேற்றவர். பதாயுனி சொல்கிறார், "நம்முடைய படையணியிலும் ராஜபுத்திரர்கள் இருக்கிறார்கள். நமக்கு எதிரிகளும் ராஜபுத்திரர்கள்தான். இவர்கள் இருவரையும் நான் எப்படிப் பிரித்துப் பார்ப்பது என நான் கமாண்டர் ஆஸப்கானிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஆஸப்கான், நீங்கள் நம்முடன் இருக்கும் ராஜபுத்திரனைக் கொன்றாலும் பாதகமில்லை. ஏனென்றால் இரண்டுபேர்களும் ஹிந்துக்கள்தான். அவர்களைக் கொல்வது இஸ்லாமிற்கு நன்மையாகத்தான் இருக்கும்... அக்பரிடம் சென்று காஃபிர்களுக்கு எதிரான இந்தப் புனிதப்போரில் (ஜிகாத்) என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 15

தாரிக்-இ-ஃபிரோஷாஹி, இஸ்லாமிய அரசனின் கீழ் வசிக்கும் ஒரு ஹிந்துவின் நிலையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது - "இஸ்லாமிய அரசனின் திவான் (கணக்காயன், அமைச்சன்) ஹிந்துக்களிடன் வரியைச் செலுத்தும்படி கேட்கையில் அந்த ஹிந்துவானவன் பணிவுடனும், அடக்கத்துடனும் அந்த வரியை திவானிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த திவான் வரி செலுத்துக் ஹிந்துவின் வாயில் எச்சிலைத் துப்ப நினைத்தால் அந்த ஹிந்து எந்தவிதமான தயக்கமுமின்றி தனது வாயைத் திறந்து திவான் துப்பும் எச்சிலை தனது வாயில் பெற்றுக் கொள்ள வேண்டும்... ஒரு ஹிந்துவைக் கேவலமாக நடத்த வேண்டுவது ஒரு இஸ்லாமியனின் கடமை. ஏனென்றால் ஹிந்துக்களே முஸ்தபாவின் (முகது நபி) மிகப் பெரும் எதிரிகள்.... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 14

முகமது-பின்-காசிமின் காலம் துவங்கி 1858-ஆம் வருடம் முகலாய ஆட்சி முடிவடையும் வரைக்கும் இஸ்லாமிய அரசர்களிடம் நிதி நிர்வாகம் என்பதே இருந்ததில்லை. அவர்களின் பொருளாதாரம் கொள்ளையடிப்பு பொருளாதாரம். பல்வேறு விதமான வரிகள், ஊழல்கள், அடுத்தவனிடம் அடித்துப் பிடுங்குவது, செத்தவனின் சொத்தை (அவனுக்கு வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தனதாக்கிக் கொள்வது, அடுத்த நாட்டின் மீது திடீரெனப்படையெடுத்து அப்பாவிகளிடம் கொள்ளையடிப்பது என அத்தனை கீழ்த்தரச் செயல்களையும் செய்த பொருளாதாரம் அது.... குடிமக்களைக் கசக்கிப் பிழிபவர்களை மட்டுமே நிதி நிர்வாகத்தைக் கவனிக்க அக்பர் அனுமதிப்பார் என்கிறார் வரலாற்றாசிரியரான பதாயுனி. அதற்கு ஏராளமான உதாரணங்களைத் தருகிறார். ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் சையத் மிர் ஃபதாவுல்லா... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey