Posts Tagged ‘ இஸ்லாமிய ஆட்சி ’

வன்முறையே வரலாறாய்… – 13

March 4, 2014
By

இந்தியாவில் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மத்திய ஆசியா நோக்கி நடத்திச் செல்லப்பட்ட பெருவாரியான ஹிந்துக்கள் ஆஃப்கானிஸ்தானத்தின் மலைகளைக் கடக்கையில் குளிர் தாளாமால் இறந்து போனார்கள். அதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தானத்து மலைகள் "ஹிந்து குஷ் (hindu killers or slayer of hindus) என்று பெயரிடப்பட்டன. இதனைக் குறித்து எழுதும் இப்ன்-பதூதா, "இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைச் சிறுவர்களும், சிறுமிகளும் அந்த மலைகளைக் கடக்கையில் பனியிலும், குளிரிலும் சிக்கி இறந்து போனார்கள்" என்கிறார்... திப்புசுல்தானின் ஜெனரலான மொபிபுல் ஹசன் எழுதிய திப்புவின் வாழ்க்கைக் குறிப்பில் (பின்னால் திப்புவின் மகனால் அது சரிபார்த்துச் செப்பனிடப்பட்டது), திப்புசுல்தான் திருவாங்கூர் போரில் ஏறக்குறைய 10,000... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்… – 10

February 20, 2014
By

எந்தவொரு பகுத்தறிவுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மனிதனும் சூஃபிக்களின் அற்புத சக்திகளைப் பற்றிய கட்டுக்கதைகளை நம்பவே மாட்டான். அது நம்பிக்கையாளர்களின் கற்பனையில் உதித்த வெறும் புனைகதைகளேயன்றி வேறோன்றுமில்லை என்பதால். இந்த சூஃபிகளின் "அற்புத சக்தி" பற்றி ஆராய்ந்த பேராசிரியர் மொஹ்மத் ஹபீப் அவர்கள் இவையத்தனையும் பின்னாட்களில் இட்டுத் திரிக்கப்பட்ட புனைவுகளே என்னும் முடிவினை நம் முன் வைக்கிறார். இன்றைக்குக் கிடைக்கும் ஆதாரங்களின்படியும், இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சூழ்நிலைகளையும் அறிந்த் எவரும் சூஃபிக்கள் இந்துக்களை அமைதியான வழிமுறைகள் மூலம் மதம் மாற்றினார்கள் என்பது வெறும் புளுகுகள் என்பதினைத் தெளிவாக்குகின்றன. சூஃபிகளில் புகழ் வாய்ந்தவரான அமீர்-குஸ்ரு (பதினான்காம் நூற்றாண்டு) அவரது... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்… – 9

February 15, 2014
By

கல்வியிலும், கணிதத்திலும், அறிவியலிலும், வான சாஸ்திரத்திலும் உலகிற்கே ஒளியூட்டிக் கொண்டிருந்த இந்தியா இஸ்லாமிய காலனியாதிக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. கல்வியறிவே இல்லாத மூடர்களான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவிற்கே உரித்தான, அற்புதமான கல்விமுறையைச் சிதைத்து அழித்தார்கள்... இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் காஃபிர்களின் பள்ளிகளை இடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகம், காலிஃபா ஓமாரால் 641-ஆம் வருடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 1197-ஆம் வருடம் மூடனான பக்தியார் கில்ஜி நாளந்தா பல்கலைக் கழகத்தை அழித்ததுடன், அங்கிருந்த பவுத்த பிட்சுகளான ஆசிரியர்களையும், மாணவர்களையும் படுகொலை செய்ததுடன், விலை... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்… – 8

February 11, 2014
By

பாபா சாகேப் அம்பேத்கர் எழுதுகிறார் - "மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்.... என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்… – 5

January 24, 2014
By

எந்தவொரு மத்தியகால இந்திய, இஸ்லாமிய வரலாற்றாசிரியர் எவரும், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிற்கு மதம் மாறினார்கள் என்னும் குறிப்பினை எழுதியிருக்கவில்லை. உண்மையில், இஸ்லாமிய ஆட்சியின் கொடுமைகள் காரணமாக, எல்லா சாதியினரும் இஸ்லாமிற்கு மாறியிருப்பதைக் காணவியலும்... சுல்தான் குத்புதீன் முபாரக் கில்ஜியால் காயடிக்கப்பட்டு, குஸ்ரூகான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட ஹிந்து, 1320-ஆம் வருடம் கில்ஜியைக் கொன்றான். அத்துடன் நில்லாமல் கில்ஜியின் அத்தனை போர்த்தலைவர்களையும் 20,000 பேவாரி ஹிந்துக்களின் (Bewari or Parwari) துணையுடன் கொன்றழித்தான்... சித்தூர் போரில் (1568) ஏறக்குறைய 40,000 விவசாயிகள் - அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்… – 4

January 10, 2014
By

காஜியானாவர், ஜிஸியா வரி வசூல் முறைகளைக் கூறிவிட்டு அதற்கும் மேலாக, "வரி கொடுக்கும் காஃபிர் வாய் திறந்து எதுவும் சொன்னால், வரி வசூலிக்கும் அதிகாரி அவன் வாயிலே எச்சிலைத் துப்ப வேண்டும். இவ்வாறு செய்வதனால் அந்த காஃபிர் தான் எத்தனை கீழான அடிமை என்பது, இஸ்லாம் எத்தனை மேலான மார்க்கம் என்பதுவும், பொய்யான கடவுள்களை அவன் வணங்கும் கேவலமும் அவனுக்கு விளங்கும்" என சுல்தானுக்கு எடுத்துக் கொடுக்கிறார்... துன்புற்ற காஷ்மீரி பண்டிட்டுகள் அன்றைய சீக்கிய குருவான தேஜ்பகதூர் சிங்கிடம் தஞ்சமடைந்து, அவரின் உதவியை வேண்டி நின்றார்கள். குரு தேஜ்பகதூர் அவுரங்கசீப்பின் அரசவையை அடைந்து அவனிடம் எடுத்துரைக்கிறார். சினமடைந்த... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்… – 3

January 9, 2014
By

1761ம் வருடம் அகமது ஷா அப்தாலி மூன்றாம் பானிபட்டுப் போரில் வெற்றி பெற்ற பிறகு உணவும், நீருமின்றித் தவித்த ஒரு பெருந்திரளான காஃபிர்களை (ஹிந்துக்கள்) நீண்ட தூரம் வரிசையில் நடத்திச் சென்றதாகவும், பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்கள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு, அவர்களின் தலைகள் வாளால் துண்டிக்கப் பட்டதாகவும் இந்த நூல் சொல்கிறது. பின்னர் அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டனர்... அடிமைகளாகப் பிடிக்கப் பட்டவர்களின் குழந்தைகளும், அந்தப் புரத்திற்குப் பிடித்துச் செல்லப் பட்ட ஹிந்துப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முஸ்லிம்களாக வளர்க்கப் பட்டார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்களின் தொகை இந்தியாவில் பல்கிப்... [மேலும்..»]

திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்

மலபாரில் வசித்த இந்துக்கள் தாய்வழி சொத்துரிமை பழக்கத்தைக் கைவிட மறுத்ததாலும், பெண்கள் உடை அணிவதில் மாற்றங்கள் செய்து கொள்ள விரும்பாததாலும், திப்பு அவர்களைக் கட்டாயமாக மாற்றமடையச் செய்வதற்காக அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றினான்.... எண்ணற்ற கோயில்களை உடைத்தபின் திப்பு குருவாயூர் கோயிலுக்கு வந்தான். அப்படி குருவாயூருக்கு வருமுன் மம்மியூர் கோயிலையும், பாலயூர் கிருஸ்துவ தேவாலயத்தையும் உடைத்தான். குருவாயூரில் திப்புவினால் ஏற்பட்ட அழிவுகளை பின்னர் சரிசெய்து விட்டதால் அந்த அழிவுகள் இப்போது காணக் கிடைப்பதில்லைவில்லை..... கூர்க் பிரதேசத்தில் திப்பு செய்த அராஜகம் போல வரலாற்றில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. கட்டாயப்படுத்தி பத்தாயிரம் இந்துக்களை முசல்மான்களாக மதமாற்றம்... [மேலும்..»]

திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

ஹைதர் அலிக்கும், திப்பு சுல்தானுக்கும் திண்டுக்கல்லில் மணீமண்டபம் அமைக்கப் படும் என்று தமிழ்க முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.. மதவெறியர்களான, வன்முறையாளர்களான இந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமிழக அரசாலும் மக்களாலும் போற்றத் தகுந்தவர்களா? வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. ஜெர்மன் மிஷநரி எழுதுகிறார் - ”திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”.... நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள்... யதுராயர்... [மேலும்..»]

[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்

[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்

...இதுதான் அகில உலக இஸ்லாமியத்தின் ஆதார சுருதி. இதுதான் நான் முதலில் ஒரு முஸ்லீம், பின்னர்தான் இந்தியன் என்று இந்தியாவிலுள்ள ஒவ்வொரு முசல்மானையும் மார்தட்டிக் கொள்ள வைக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் ஓர் இந்திய முஸ்லீம் மிகச்சிறிய பங்கே ஆற்றி வருவதற்கும், அதேசமயம் முஸ்லீம் நாடுகளின் நலன்களுக்காக அவன் அயர்வு சோர்வின்றி பாடுபட்டு வருவதற்கும் அவனுடைய சிந்தனைகளில், எண்ணங்களில் முஸ்லீம் நாடுகள் முதல் இடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்று வருவதற்கும் இந்த உணர்வே காரணம்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey