Posts Tagged ‘ இஸ்லாமிய பாலியல் கொடூரங்கள் ’

அக்பர் என்னும் கயவன் – 18

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.   << தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> தொடர்ச்சி… அக்பர் கலைகளையும், இலக்கியங்களையும் ஆதரித்த சிறந்த அரசர் என நமது வரலாற்று நூல்கள் கூக்குரலிடுகின்றன. அதனையெல்லாம் விடவும் அக்பரின் அவையை அலங்கரித்த அற்புதமான ஒன்பது “நவரத்தினங்கள்” அவரது புகழைப் பறைசாற்றுவதாக இருப்பதாக நம்மையெல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் அதற்கு முற்றிலும் எதிரான உண்மைகளைச் சொல்லுகின்றன. அந்த “நவரத்தினங்கள்” அத்தனைபேரும் ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமற்ற, அக்பரை முகஸ்துதி செய்து பிழைக்கிற கைக்கூலிகள் என்பதே உண்மை. வெளித் தோற்றத்திற்கு அக்பர் அவர்களை மதிப்பது போலத்... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 17

பதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது... இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 16

வரலாற்றாசிரியர் பதாயுனி அக்பரின் படையில் ஒரு சாதாரண சிப்பாயாகப் பணிபுரிந்தவர். ராணா பிரதாப்புக்கு எதிராக நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போரில் பங்கேற்றவர். பதாயுனி சொல்கிறார், "நம்முடைய படையணியிலும் ராஜபுத்திரர்கள் இருக்கிறார்கள். நமக்கு எதிரிகளும் ராஜபுத்திரர்கள்தான். இவர்கள் இருவரையும் நான் எப்படிப் பிரித்துப் பார்ப்பது என நான் கமாண்டர் ஆஸப்கானிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஆஸப்கான், நீங்கள் நம்முடன் இருக்கும் ராஜபுத்திரனைக் கொன்றாலும் பாதகமில்லை. ஏனென்றால் இரண்டுபேர்களும் ஹிந்துக்கள்தான். அவர்களைக் கொல்வது இஸ்லாமிற்கு நன்மையாகத்தான் இருக்கும்... அக்பரிடம் சென்று காஃபிர்களுக்கு எதிரான இந்தப் புனிதப்போரில் (ஜிகாத்) என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 15

தாரிக்-இ-ஃபிரோஷாஹி, இஸ்லாமிய அரசனின் கீழ் வசிக்கும் ஒரு ஹிந்துவின் நிலையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது - "இஸ்லாமிய அரசனின் திவான் (கணக்காயன், அமைச்சன்) ஹிந்துக்களிடன் வரியைச் செலுத்தும்படி கேட்கையில் அந்த ஹிந்துவானவன் பணிவுடனும், அடக்கத்துடனும் அந்த வரியை திவானிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த திவான் வரி செலுத்துக் ஹிந்துவின் வாயில் எச்சிலைத் துப்ப நினைத்தால் அந்த ஹிந்து எந்தவிதமான தயக்கமுமின்றி தனது வாயைத் திறந்து திவான் துப்பும் எச்சிலை தனது வாயில் பெற்றுக் கொள்ள வேண்டும்... ஒரு ஹிந்துவைக் கேவலமாக நடத்த வேண்டுவது ஒரு இஸ்லாமியனின் கடமை. ஏனென்றால் ஹிந்துக்களே முஸ்தபாவின் (முகது நபி) மிகப் பெரும் எதிரிகள்.... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 14

முகமது-பின்-காசிமின் காலம் துவங்கி 1858-ஆம் வருடம் முகலாய ஆட்சி முடிவடையும் வரைக்கும் இஸ்லாமிய அரசர்களிடம் நிதி நிர்வாகம் என்பதே இருந்ததில்லை. அவர்களின் பொருளாதாரம் கொள்ளையடிப்பு பொருளாதாரம். பல்வேறு விதமான வரிகள், ஊழல்கள், அடுத்தவனிடம் அடித்துப் பிடுங்குவது, செத்தவனின் சொத்தை (அவனுக்கு வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தனதாக்கிக் கொள்வது, அடுத்த நாட்டின் மீது திடீரெனப்படையெடுத்து அப்பாவிகளிடம் கொள்ளையடிப்பது என அத்தனை கீழ்த்தரச் செயல்களையும் செய்த பொருளாதாரம் அது.... குடிமக்களைக் கசக்கிப் பிழிபவர்களை மட்டுமே நிதி நிர்வாகத்தைக் கவனிக்க அக்பர் அனுமதிப்பார் என்கிறார் வரலாற்றாசிரியரான பதாயுனி. அதற்கு ஏராளமான உதாரணங்களைத் தருகிறார். ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் சையத் மிர் ஃபதாவுல்லா... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 12

இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்பில் கூறப்படும் "விபச்சாரிகள்" என்கிற பதம் ஹிந்துப் பெண்களைக் குறித்தே சொல்லப்பட்டது. போர்களில் தங்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், கணவன்மாரையும் இழந்த அப்பாவிப் பெண்கள் அக்பரால் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப்பட்டார்கள். சிறுவர்களுடன் உறவு கொள்வதில் ஆரம்பித்து விபச்சாரமும், போதைமருந்து உபயோகமும், குடிகாரர்களின் சண்டைகளும் அக்பரின் அரசாட்சியில் தினப்படி வாழ்க்கைமுறையாகவே இருந்தன என்பதில் சந்தேகமில்லை. அக்பர் தனது அரசவை முக்கியஸ்தர்களின் மனைவிகளையும் விட்டு வைக்கவில்லை... சிறுவர்களின் மீது பித்துப் பிடித்து அலைந்த பாபரை அவர் தனது மனைவியிடம் உடலுறவு கொள்ளும்படி பாபரின் தாய் வற்புறுத்தி அனுப்பி வைத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது. அக்பரின்... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 11

அக்பரின் சமகால குறிப்பேடுகள் அவர் தனது ஹராமிலும் (அந்தப்புரம்), சிறைகளிலும், சத்திரங்களிலும் அடைத்து வைத்திருந்த ஏராளமான அழகிய பெண்களை தனது உபயோகத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டதுடன் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவர்களைப் பகிர்ந்து கொண்டதனையும் குறிப்பிடுகின்றன...போரில் தோற்றுச் சரணடையும் ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்பர் விரும்பினார். இந்த வழிமுறையின் மூலமாக இந்தியாவின் பல தலைசிறந்த ஹிந்து அரசர்களின் மகள்களைத் தனது அந்தப்புரத்திற்கு அபரித்துச் சென்றார்... விர் பத்ரா பன்னாவை நெருங்குகையில் அவர் சென்ற பல்லக்கிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அவருடைய மனைவி உடன்கட்டை ஏற இருக்கையில் அக்பர் அதனைத் தடுத்து... [மேலும்..»]

அக்பர் என்னும் கயவன் – 10

பதினாலாவது வயதில் அரியணை ஏறிய நாளிலிருந்து அக்பரின் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. சமகால இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புகள் அக்பரின் மட்டுமீறிய பெண்ணாசை குறித்து நீண்ட குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. போரில் தோற்கடிக்கப்பட்டவன் இஸ்லாமியனாக இருந்தால் அவர்களின் நிரம்பி வழியும் அந்தப்புரம் அப்படியே அக்பரின் கையில் ஒப்படைக்கப்படும். அதுவே ஹிந்துக்களாக இருந்தால் அவர்கள் குரூரமாக மிரட்டப்பட்டு அவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் பிற பெண்களையும் தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு நிர்பந்திப்பது அக்பரின் வழக்கமாக இருந்தது... இதன் காரணமகாகவே, கணிசமான ஹிந்துப் பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்களைத் தீயிலிட்டுக் கொளுத்திக் கொண்டு மரணமடைந்தார்கள். இன்னும் சிலர்... [மேலும்..»]

தாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா? : உண்மை வரலாறு

ஷாஜஹான் ஒருபோதும் தான் தாஜ்மஹாலைக் கட்டியதாக எங்குமே எழுதி வைக்கவில்லை. ஏன்? தாஜ்மஹாலிலேயே கூட ஒரு சிறிய கல்வெட்டு கூடக் கிடையாது. கட்டியிருந்தால்தானே எழுதி வைக்கமுடியும்? இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot... ஷாஜஹானின் அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். மும்தாஜை அவர் திருமணம் செய்து கொண்ட போது மும்தாஜுக்கு 18 வயது. திருமணம் செய்து கொண்ட வருடத்திலிருந்து மும்தாஜ் இறக்கும் வரை 14 பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அதாகப்பட்டது மும்தாஜ் வருடமெல்லாம் கர்ப்பிணியாகவே இருந்தார்.இறுதியில் 14வது குழந்தைப்பிறப்பின்போது மும்தாஜ் இறந்து போனார்...... [மேலும்..»]

விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…

மெய்யாகவே இந்த நாவல் பேசுவது இந்துத்துவம் தானா? இந்த வாதத்தைப் போன்ற அபத்தம் வேறேதுவும் இல்லை. உலக அளவில் எழுதப்பட்ட பல் நாவல்களின் பேசுபொருள் தோல்வியால் துவண்டவர்களின் வரலாறே. எந்த நிலையிலும் ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்ட தரப்பில் தன்னை நிறுத்தியே படைப்புகளை உருவாக்குவான்.வெற்றி வரலாறுகள் என்றுமே இலக்கிய மதிப்பு பெற்றதில்லை... நிகழ்த்தப்பட வேண்டிய அழிவுகள் அனைத்தும் முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டன. வெளிப்படுத்தப்பட வேண்டி இன்று தூண்டி விடப்பட்டிருக்கும் குரூரங்களை இந்த தேசம் முன்பே சந்தித்து முடித்து விட்டது. காயம் ஆற, ஆற குதறப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் பல முறை நடந்தாயிற்று. இனியாவது இணைந்து வாழ்வதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற... [மேலும்..»]