Posts Tagged ‘ இஸ்லாமிய பெண்ணடிமைத்தனம் ’

தாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா? : உண்மை வரலாறு

ஷாஜஹான் ஒருபோதும் தான் தாஜ்மஹாலைக் கட்டியதாக எங்குமே எழுதி வைக்கவில்லை. ஏன்? தாஜ்மஹாலிலேயே கூட ஒரு சிறிய கல்வெட்டு கூடக் கிடையாது. கட்டியிருந்தால்தானே எழுதி வைக்கமுடியும்? இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot... ஷாஜஹானின் அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். மும்தாஜை அவர் திருமணம் செய்து கொண்ட போது மும்தாஜுக்கு 18 வயது. திருமணம் செய்து கொண்ட வருடத்திலிருந்து மும்தாஜ் இறக்கும் வரை 14 பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அதாகப்பட்டது மும்தாஜ் வருடமெல்லாம் கர்ப்பிணியாகவே இருந்தார்.இறுதியில் 14வது குழந்தைப்பிறப்பின்போது மும்தாஜ் இறந்து போனார்...... [மேலும்..»]

நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை

அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத யூதர்கள் என்ற ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது - இதை எப்படி செய்ய முடிகிறது? அந்த பயங்கரவாதிகளை ஏன் காக்க வேண்டும் - அவர்களுடன் என்ன உறவு, மத ரீதியிலானதை தவிர?... முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் முஸ்லிம் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்... ”இந்த... [மேலும்..»]

விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…

மெய்யாகவே இந்த நாவல் பேசுவது இந்துத்துவம் தானா? இந்த வாதத்தைப் போன்ற அபத்தம் வேறேதுவும் இல்லை. உலக அளவில் எழுதப்பட்ட பல் நாவல்களின் பேசுபொருள் தோல்வியால் துவண்டவர்களின் வரலாறே. எந்த நிலையிலும் ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்ட தரப்பில் தன்னை நிறுத்தியே படைப்புகளை உருவாக்குவான்.வெற்றி வரலாறுகள் என்றுமே இலக்கிய மதிப்பு பெற்றதில்லை... நிகழ்த்தப்பட வேண்டிய அழிவுகள் அனைத்தும் முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டன. வெளிப்படுத்தப்பட வேண்டி இன்று தூண்டி விடப்பட்டிருக்கும் குரூரங்களை இந்த தேசம் முன்பே சந்தித்து முடித்து விட்டது. காயம் ஆற, ஆற குதறப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் பல முறை நடந்தாயிற்று. இனியாவது இணைந்து வாழ்வதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…37

November 22, 2014
By

தாங்கள் பிறந்த நாடுகளில் எங்கும் வெளியில் சென்று வரும் சுதந்திரமுடைய அந்தப் பெண்கள் ரியாத்திலும், ஜெத்தாவிலும், தமாமிலும் பூட்டுக்கள் பூட்டி அடைக்கப்பட்ட வீடுகளில் அடிமைகளைப் போல வாழ வேண்டிய நிலைமை விவரித்துக் கண்ணீர் சிந்தினார்கள்.....அவர்களை சவூதி அரேபியாவிற்கு அழைத்துவந்த அவர்களின் ஒப்பந்த நிறுவனங்களால் ஆட்டு மந்தைகளைப் போல டார்மெட்டரிகளில் அடைக்கப்பட்டு, தனிமையில் உழன்று, வெளியுலகில் எவரிடமும் உதவி கேட்கமுடியாத நிலையில் இருக்கும் அவர்கள், பாலியல் ரீதியாக சவூதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள் - மனித உரிமைகளைக் கண்காணிக்கும் இயக்கத்தினர் அளிக்கும் ஒரு ரிப்போர்ட் சவூதி அரேபியாவின் பணிப்பெண்களின் நிலைமையை இப்படி விவரிக்கிறது... அடிமைகளை வைத்துக் கொள்வது முகமது... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…36

November 13, 2014
By

இஸ்லாமிய அடிமைப்படுத்துதலின் இன்னொரு மனிதாபிமானமற்ற, கொடூரமான வழக்கம் எதுவென்றால் அது பரவலான முறையில் மிருகத்தனமாக காயடிக்கப்பட்ட (castration) ஆண் அடிமைகள்தான். ஏராளமான பெண்களுடன் பெரும் ஹராமை (Harem) வைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சுல்தான்களும், பிற செல்வந்தர்களும் அதனை கவனித்துக் கொள்ள காயடிக்கப்பட்ட அலிகளையே பெரிதும் விரும்பினார்கள்... முகமது நபியின் காலத்திலிருந்தே இளம் சிறுவர்களின் மீதான இச்சை இஸ்லாமிய உலகில் தொடர்ந்து நடந்து வருகிற ஒன்றே. காஃலிபா அல்-அமீன் அராபிய உலகில் கில்மான்களை, அவர்களுடனான உடலுறவுத் தொடர்புகளையும் நிறுவனமாக்கிய ஒருவர்... ஜஹாங்கீர் மட்டும் ஏறக்குறைய 1200 அலிகளுக்குச் சொந்தக்காரனாக இருந்திருக்கிறான். அலாவுதீன் கில்ஜிக்குயின் சொந்த உபயோகத்திற்கென 50,000... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…35

November 5, 2014
By

ஜிகாத் செய்து காஃபிர்களைக் கொள்ளையடிப்பதால் கிடைக்கும் செல்வத்துடன் மட்டுமன்றி, அவர்களின் பெண்களும் தங்களுக்குக் கிடைப்பார்கள் என்னும் ஆசையே முகமதின் சீடர்களை அன்று முதல் இன்றுவரை ஜிகாதிகளாக்குகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை... பாலியல் அடிமைகளைக் கைப்பற்றுவது குறித்து நம்பிக்கையாளர்களுக்கு அல்லா குரானில் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருப்பதனைக் காணலாம். முகமது நபியே மூன்று அழகான அடிமைகளைத் தனது வைப்பாட்டிகளாக வைத்திருந்தார். அத்துடன் முகமது அவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அடிமைப் பெண்களை, வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள என அவரது சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார்... அக்பரின் ஹராமில் (அந்தப்புரம்) ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஜஹாங்கீரும், ஷாஜஹானும் தலா... [மேலும்..»]

இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

October 20, 2014
By

பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகளின் கண்ணோட்டமே நோபல் பரிசுக் குழுவின் விளக்கத்தில் தெரிகிறது.. இந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் மலாலா என்ற பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில்... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 31

September 16, 2014
By

"இஸ்லாமின் வருகை இந்தியப் பெண்களின் சுதந்திரத்தை மிகவும் பாதித்தது" எனக்கூறும் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் பெண்களைப் போலவே இந்துப் பெண்களும் முகத்தை மூடும் பர்தா அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்கிறார்... பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமும், மதச் சார்பற்ற கல்வியும், பொது சட்ட நடைமுறைகளும், ஜனநாயகமும், தனி மனித சுதந்திரமும் இந்திய முஸ்லிம்கள் அல்லாதோரால் முழு ஏற்புடன் வரவேற்கப்பட்டன. குறிப்பாக வங்காள இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விமுறைய திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பயில முயன்றார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் அது போன்ற கல்விமுறையை ஏற்காமல் விலகி நின்றார்கள். இந்திய முஸ்லிம்கள்... [மேலும்..»]

லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

September 13, 2014
By

மணக்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தால் ஒழிய அது இஸ்லாமிய நிக்காஹாக கருதப் படாது. ஆகவே மணப் பெண் முதலில் மதம் மாறிய பின்னரே ஷரியா சட்டப் படி திருமணம் நடைபெறுகிறது. இதையே பதிவு திருமணச் சட்டப் படி செய்திருந்தால் மணப் பெண் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது, ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு திருமணம் செய்வது அனேகமாக இல்லை. எனவே, இங்கு திருமணத்தின் முக்கிய நோக்கமே மதம் மாற்றுவது என்பதாகிறது. அதனாலேயே இது லவ் ஜிஹாத் என்று வழங்கப் படுகிறது... இந்து அல்லது பதிவுச் திருமணச் சட்டப் படி உரிமைகளும் கடமைகளும் அனேகமாக கணவன்... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 30

September 8, 2014
By

முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து... [மேலும்..»]