
எதிர்மறை செய்திகளும் எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை மனிதர்களும் மிக மிகக் குறைவாக இருக்கும் ஒரு கதைக்களம், நிறைவான ஒரு நீண்ட படத்தைத் தருவது இப்படத்தின் சிறப்பம்சம்… நமது கலாச்சாரத்தின் நல்லடையாளமாகத் திகழும் மகளிர் இடும் நெற்றித் திலகம் இப்படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் பாத்திரங்களாலும் தெளிவாகத் துலங்கும்படி உடையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது…