இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்

குட்டி விலங்குகளை சுவாகா பண்ணும் மலைப்பாம்புகளைப் பிடிக்க இயலாமல் மொத்த புளோரிடா அரசாங்கமும் தடுமாறியது.. ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேக்கர் உதவியுடன் தமிழ் நாட்டிலிருந்து மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் என்ற இரு இருளர்களையும் அங்கு தருவிக்கிறது. இது நடந்தது 2017ல், பொய்யான சித்தரிப்பில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம் ‘ கூறும் 1993ஆம் வருடத்திற்கு நாற்பது ஆண்டுகள் சென்ற பிறகு நிகழ்ந்தது இது… இருளர்களுக்கு என்று தனியாக உள்ள கூட்டுறவுச் சங்கம் நாற்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. இதன் உறுப்பினர்களான இருளர்கள் மருந்துக்காக விஷப் பாம்புகளைப் பிடித்து கொடிய நஞ்சினை உரிய தொழில் நுட்பங்களோடு சரியான பாதுகாப்பு வழிமுறைகளோடு எடுக்கிறார்கள்… கிட்டதட்ட இரண்டு இலட்சம் எண்ணிக்கையுள்ள இருளர் சமுதாயத்தின் இறுதி பாம்புப் பிடிப்பவர்களாக இவர்கள் மட்டுமே இருக்கப் போகின்றனர்…

View More இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்

ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது.இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது… இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள்….

View More ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]

தான் அன்பும், மதிப்பும் கொண்ட ராஜீவ் இறந்துவிட்டார் என்பதையே சோனியாவால் நம்ப முடியவில்லை. இனி ராஜீவின் அன்பான பேச்சுக்களோ ஆழமான முத்தங்களோ சோனியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை… இந்திரா காந்தியைப் பற்றியும் ராஜீவ் காந்தியைப் பற்றியும் எந்தவிதமான விமர்சனமும் புத்தகத்தில் வைக்கவில்லை என்பது உண்மைதான். போஃபார்ஸ், குத்ரோச்சி பற்றிய சர்ச்சைகளைப் பற்றியும் நான் எழுதவில்லை. காரணம், நேரு குடும்பத்தினர் அனைவரும் நேர்மையாளர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை…

View More சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]