இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

திருவிழாவின் போது நடுத்தெருவில் பொங்கல் வைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு 1000 பெண்களை திருவனந்தபுரம் காவல்துறை கைது செய்து தடை உத்தரவை மீறியதற்காக வழக்கும் பதிவு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது… சிந்த் மாகாணத்தில் சிறுமிகள், திருமணமான பெண்கள் உட்பட 25-30 இந்துப் பெண்கள் ஒவ்வொரு மாதமும் கடத்தப் பட்டு மதமாற்றப் படுகிறார்கள்… மதுரை மீனாட்சி கோயிலைச் சுற்றி சட்டத்தை மீறிக் கட்டப்பட்டுள்ள 770 கட்டடங்கள் குறித்து இன்னும் 60 நாட்களுக்குள் நடவடிக்கை… உபனிஷத ஞானச் செல்வத்தினை வாராவாரம் தொலைக்காட்சித் தொடர் வடிவில் வழங்கும் ஒரு சீரிய முயற்சி “உபநிஷத் கங்கா”…

View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை

வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை”, “கால பின் வரையறை” என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்… பௌத்த நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங் தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.. தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால், ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.

View More ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை

யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2

மந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. … தினமும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்…

View More யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது. (எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி)

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக .. அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது” என்று கூறுகிறார் பாம்பன் சுவாமிகள்.

View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்

சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ….”

View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்