பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்

மெழுகுவர்த்தியை முத்தமிட்டுக் கொண்டு எப்படியாவது சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் உரைத்துக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. காட்டுமிராண்டித்தனமாக, மூர்க்கத் தனமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதிலடி கொடுக்காமல் சமாதானம், சமாதானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பது எந்தப் பயனையும் தரப்போவது இல்லை.

View More பாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்

கூகுள் கொண்ட கோபம்

அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.

View More கூகுள் கொண்ட கோபம்

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4

பங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால்.

View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2

சில நாள்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது. அவரிடம் காஷ்மீர் பிரச்சினையின் தீர்விற்கு வழி கேட்டபோது அவர் காஷ்மீர் பிரச்சினை தீர இரண்டு விஷயங்களை அரசு செய்ய வேண்டும் என்றார். ஒன்று பெரிய அளவில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். இரண்டாவதாக முஸ்லீம் அல்லாதவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்றார்.

View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1

ஒவ்வொரு இனமும் தங்கள் இன வரலாறு என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவும் தங்கள் மூதாதையார்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு இந்நாள் வரை வந்துள்ளதாகவும் உறுதியாக நம்புகின்றனர். உணவு, உடை, மொழி, மூதாதையரால் தங்களுக்கு வந்துள்ள அறிவு (எழுதப்பட்டதாகவோ அல்லது வாய்மொழியால் இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவோ இருப்பது), கடவுள் மற்றும் அந்தக் கடவுளை வழிபடும் முறைகள், மருத்துவம், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் (தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை) போன்றவை இனத்திற்கு இனம் வேறுபட்டு உள்ளன.

View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நீங்கள் இதுவரை சந்தித்துள்ள ஏழைகளில் பரம ஏழையாக உள்ளவருக்கு அதனால் பயன்கிடைக்குமா? என்று சிந்தித்து பார்த்து காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள் என்பதுதான் மகாத்மா சொன்ன அறிவுரை ஆகும்… இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்..சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு மாறுபடும். இதில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

View More பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1

டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் எல்லாவற்றுக்கும் செலவு அதிகமாக ஆகும். புவி பாதுகாப்பு உச்சி மாநாடு காசபிளாங்காவிலோ அல்லது கொல்கத்தாவிலோ நடைபெற்றிருந்தால் செயற்கையாக வெப்பம் அளிப்பது மற்றும் ஒளி அளிப்பது ஆகியவற்றுக்காக மின்சாரத்தை அதிக அளவில் செலவிடவேண்டி இருந்திருக்காது….. அமெரிக்கா கடந்த 30 ஆண்டில் தனது நிலப்பரப்பில் அணுசக்தி ஈனுலைகளை ஒன்றைக்கூட அமைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணுசக்தி ஈணுலைகளை அமைத்துத் தருவதாக சொல்லி கோடிக்கணக்கான தொகையை அபகரிக்க முற்படுகின்றன. (மூலம்: எம்.டி.நளபத், தமிழில்: ஆழிநோக்கி)

View More பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1

அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்

நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்– “நாயை அடிப்பானேன் வம்பைச் சுமப்பானேன்” என்று அதையே சற்று மாற்றி இந்தச் சம்பவத்திற்குப் பொருத்தினோமானால், “நாயை அடிப்பானேன் பீரைக் குடிப்பானேன்” என்று பொருத்தி விடலாம்.. இந்தச் சம்பவம் நம் சிந்தனைகளைத் தூண்டட்டும். இந்தியா போன்று பல்வேறு கலாசாரங்கள் கலக்கும் தேசத்திற்கு, விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையை கற்றுத் தரும் ஒரு பாடமாக அமையட்டும்.

View More அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்

சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள்.. சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.

View More சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

நைஜீரியா விருந்து

இங்கிருக்கும் இந்தியர்கள் 80% குடும்பத்துடன் இருக்கிறார்கள். கம்பெனி செலவில் ஒரு வீடு(குறைந்த பட்சம் 1500 சதுரடி), வாகனம், வண்டியோட்டி, குழைந்தைகள் பள்ளிக் கட்டணம், வீட்டுக் காவலாளி, பணிப்பெண் (சமைக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள), மின்சாரக் கட்டணம், மற்றும் பல. இங்கு வேதிகாவைப் போல் வரும் பெண்கள் குஷ்புவை போல் ஆவது உறுதி. இதைத் தவிர இந்தியத் தூதரகத்தில் …

View More நைஜீரியா விருந்து