Posts Tagged ‘ எதிர்வினை ’

வள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை

ஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது.. [மேலும்..»]

அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

July 12, 2017
By

உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை... அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது... [மேலும்..»]

சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

October 24, 2015
By

பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை... வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण - shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु - shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி... பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச்... [மேலும்..»]

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்

பயங்கர வாத இயக்கத்திற்கு கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம் என்ற கட்டுரையில் உள்ள கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து, ஆதாரங்கள் கோரி மனித நேய மக்கள் கட்சியின் சட்ட ஆலோசகர் கடிதம் எழுதியிருந்தார். அந்த ஆதாரங்களை கட்டுரையாசிரியர் இங்கு தொகுத்தளிக்கிறார்... அல்-உம்மா இயக்கத்திலிருந்து பிரிந்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர், மனிதநேய மக்கள் கட்சி என்பது த.மு,மு.கவின் அரசியல் பிரிவு.. திரு. ஜவாஹிருல்லா சிமியிலும் பொறுப்பில் இருந்தார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திலும் பொறுப்பில் இருந்தார்... அவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்ட ... [மேலும்..»]

கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

"அற்புதமாக, உருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். கம்பனையே முக்கியமாகப் பேசவிட்டு தேவையான இடங்களில் மட்டும் உங்கள் மணியான விளக்கங்களைத் தருகிறீர்கள்.. அருமை. இந்தக் கட்டத்தில் வரும் முக்கியமான ஒரு பாடலைக் குறிப்பிடுவீர்கள் என்று பார்த்தேன். .. தங்களை அது கவரவில்லையோ.." [மேலும்..»]