Posts Tagged ‘ எம்.ஜி.ராமசந்திரன் ’

அரசியல்

தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்

February 4, 2019
-
தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்

தலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது - அஞ்சாமை, ஈகை, விவேகம், செயலூக்கம். திராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்... யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு... [மேலும்..»]

அரசியல்

மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

மொழிவாரி மாநிலங்கள்:  உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]

அரசியல்

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

  ‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழகத்தை ஆளும் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கும் பாமகவுக்கு நிச்சயமாகப் பொருந்தும். பாமகவினர் அண்மைக்காலமாக செய்துவரும் அலப்பறைகளைக் கண்ணுறும் எவரும், சற்றே கதிகலங்கிப் போவார்கள். உண்மையிலேயே அன்புமணிக்கு முதல்வர் கனவு வந்துவிட்டதா? அல்லது, தந்தையின் இயக்கத்தில் முதல்வன் வேடத்தில் அன்புமணி நடிக்கும் ஏதாவது புதிய திரைப்படம் தயாரிக்கும் முஸ்தீபா? “அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்று எப்படித்தான் நெஞ்சு நிமிர்த்தி அறைகூவல் விடுக்கிறார் ராமதாஸ்? காண்க: அன்புமணியே முதல்வர் வேட்பாளர் பா.ஜ.,வுக்கு ராமதாஸ்... [மேலும்..»]

அரசியல், உடல்நலம், சமூகம்

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” -என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]

அரசியல், சமூகம்

எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2

எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2

2003- 04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 2,828 கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2013-14ஆம் நிதியாண்டில் இது ரூ. 21,500 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பெரும்பகுதி தான் விலையில்லாத் திட்டங்களில் செலவிடப்படுகிறது. “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று மகாகவி பாரதி கேட்டது இதைத் தான். இந்த டாஸ்மாக் வருமானம் முழுவதும் தமிழக இளைஞர்களின் ஆற்றலை உறிஞ்சி, தமிழகப் பெண்களின் கண்ணீரில் விளைவிக்கப்பட்ட வருவாய் தான். மாநிலத்தையே மலடாக்கும் டாஸ்மாக் அளிக்கும் வருவாயில்... [மேலும்..»]