மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2

ஒரு ஃபிஜி தீவுக்காரரான உங்களுக்கு மோடி மீது ஏன் இவ்வளவு ஆர்வம் என்றேன். இந்தியர்களுக்குத்தான் அவரது அருமை பெருமைகள் தெரிவதில்லை. உலக இந்துக்களின் தலைவராக நாங்கள் மோடியைக் காண்கிறோம். இத்தனை நாட்களாக இப்படி ஒரு அரிய தலைவனை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? இவரை பிரதமராக்காமல் என்ன செய்தார்கள் இந்தியர்கள் என்றார் அந்த டாக்ஸி டிரைவர்… டிஜிடல் இண்டியாவுக்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைப் போலவே முக்கியத்துவம் உள்ளது மோடியின் டெஸ்லா விஜயமும் மஸ்க்குடனான அவரது சந்திப்பும். சரியான ஒப்பந்தங்கள் உருவானால் இந்தியாவின் எரிசக்தி தேவை பெரும் அளவு குறையும். இந்தியாவின் வாகனஙக்ள் வெகுவாக பேட்டரி வாகனங்களாக மாறும்….

View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2

மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி

முதலில் எல்லா கிராமங்களுக்கும் அதாவது நாடு முழுவதும் 100 mbps இணைய வசதி தருவது. அடுத்தது, எலெக்ட்ரானிக் பொருட்களை பெருமளவில் இங்கேயே தயாரிப்பது. இந்த இரண்டையும் செய்துட்டால் என்னவெல்லாம் நடக்கும்?… இப்போது நாம் அரசையும் அரசின் தேவைகளும் அணுகும் முறை முழுவதுமாக மாறிவிடும். தொலை தூர கிராமங்களில் உள்ளுரிலேயே சான்றிதழ்கள், புகார்கள் அளிக்கும் நிலையங்களை இணைய வசதியுடனும் கணினி வசதியுடனும் நிறுவி விடலாம். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, தனியார் மருத்துவமனை அருகில் எது உள்ளது என ஆரம்பித்து, தரப்படும் மருந்து சரியானதா, தரமானதா என்று வரை பார்த்துவிட முடியும்….

View More மோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி

இந்தியாவிலி​ருந்து வந்த ஆப்பிள்

“ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார்… மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம்… இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே…

View More இந்தியாவிலி​ருந்து வந்த ஆப்பிள்

நட்சத்திரங்களின் கதை!

ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை, அது உருவாகும், உள்படல தூசுகளின் (Interstellar Dust ) மூலத்தில் இருந்து, அது தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான நிகழ்வுகளை விளக்க முயலுவோம். நாம் இங்கே அந்த படலகதையின் உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலபோவதில்லை. ஆனால் இந்தக்கதையை, இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும் இயல்பிலேயே விளக்க தலைப்படுகிறோம்.

View More நட்சத்திரங்களின் கதை!

மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்

எப்படி ஏமாற்ற முடியும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார்…இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன… எழுந்துவர வாய்ப்பில்லை என்று எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான்…

View More மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா?: புதிய தகவல்கள்