Posts Tagged ‘ எல்.கே.அத்வானி ’

அரசியல்

பாஜகவில் பிதாமகர்கள்

பாஜகவில் பிதாமகர்கள்

காலம் மாறி வருவதையும் துடிப்பும் ஆற்றலும் ஓரளவு குறைந்த வயதும் கூடிய தலைவர்களை இன்றைய பாரதம் எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. வாக்களர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். எதிர்காலம் குறித்த கனவுகளையும் அதை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய தலைவர்களையும் எதிர் நோக்கிக் காத்திருப்பவர்கள்.... இது நாள் வரை மதிப்பையும் மரியாதையையும் பிரமிப்பையும் ஈட்டிய அந்த முது பெரும் தலைவர்கள் எல்லோரும் சாதாரண திராவிடக் கட்சி அரசியல்வாதிகள் போல தேர்தலில் போட்டியிடப் பிடிவாதம் பிடிப்பதும் இந்த சீட்டுதான் வேண்டும் என்று சிறு பிள்ளை போல அடம் பிடிப்பதும் அவர்கள் மீது பெரும் மரியாதைக் குறைவையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.... [மேலும்..»]

அரசியல்

பீஷ்ம பிதாமகருக்கு …

பீஷ்ம பிதாமகருக்கு …

எங்களின் வணக்கத்திற்குரிய ஆச்சார்யர் அவர்களுக்கு, மிகவும் அசாதாரணமான ஒரு நிலையில் இதை எழுத துவங்குகிறேன் . இந்த தேசம் ஒரு அசந்தர்ப்பமான சூழலை சந்தித்து கொண்டிருக்கிறது. எதிரிகள் வெடி வெடித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கயவர்களும், கம்யூனிஸ்ட் கயவர்களும் உங்களின் ஜன நாயக மாண்பின் பகுதிகளை தப்பும், தவறுமாகவும், மிகுந்த கயமைத்தனத்தோடும் பிரித்து பொருள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் . இந்த தேசத்தை அழிக்க வேண்டும் என நினைக்கும் பிரிவினைவாத சக்திகள், அயல் நாட்டு ஆதிக்க சக்திகள் மிகுந்த குயுக்தியோடு தங்களின் ஊடகங்களில் அவதூறை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. இந்த பாரத தேசத்தின் மக்களிடையே அவ நம்பிக்கையையும் அச்சத்தையும் விதைப்பதற்காக பல்வேறு... [மேலும்..»]

அரசியல்

அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை

அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை

ஏ, ஏ, அம்மா. இந்தா பாருங்கமா. அழாதீங்கம்மா. அம்மா, அழாதீங்கம்மா. பாருங்க. நீங்கள் அழுவதைப் பார்த்தால் எனக்குக் கண்ணில் கண்ணீர் தேங்குகிறது... நான் திருடவில்லை என்று, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் நீங்கள் கூப்பாடு போட ஆரம்பித்தது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூப்பாடு போட்டால்தான் இந்தியப் பத்திரிக்கை உலகமும் கவனிக்கும். யவன ராணி கூப்பிட்ட குரலுக்கு ஆஜராவதில்தான் மெக்காலே புத்திரர்களுக்குப் பெருமிதம் அதிகம்.. [மேலும்..»]