
” எனக்குத் தஞ்சாவூர் பக்கம் கிராமமுங்க; ஒரு பொண்ணு, ஒரு பையன். விவசாயந்தான் பொழப்பே நமக்கு. ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். கடன உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணும் விளங்கலே, கடவுள் கண்ணே தொறக்கல… எனக்கு அந்த பெரியவரை அணைக்கத் தோன்றியது; அணைத்துக் கொண்டேன். வேண்டாமென மறுத்தபோதும், பாக்கெட்டில் பலவந்தமாய் பணத்தைத் திணித்தேன்… இந்தப் பதிவுகள்தான் என்னை இந்த நூலை எழுதவைத்தது. “வாட்ஸ்-அப்”பிலேயே நானும் இதை எழுதி முடித்தேன். அவைகளின் தொகுப்புதான் இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருப்பது…