Posts Tagged ‘ எழுமின் விழிமின் ’

எழுமின் விழிமின் – 36

பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும்.  வீரன் தான் முக்தியை எளிதில் எட்டிப் பிடித்து எய்த முடியும்; கோழை அல்ல.  வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள்.  மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்கிறது.  'மகத்தான சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும்' என்பது உண்மை தான்; சந்தேகமில்லை.  இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும். மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகளால் கட்டுண்டுக் க்டக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்ப்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள். 'அச்சமற்றிரு' என்று... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 35

.....பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்கவேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிட,ம் கடுங்கோபமாக இருக்கிறாள். அந்நிலையில் அவள் இருக்கும்பொழு து உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப்போய் புதிய அலை எழுகிறது. அது தான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது. கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 34

முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவுமே அவனை ஒருபோதும் திருப்திப் படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்து கொண்டே செல்வோம்.... உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும்,  நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும்.  நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது.... நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமான, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர் விட்டுக் கதறுகிறோம்.  உதவியானது வெளியிலிருந்து வராது. ... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 33

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை.... பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 32

நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டு, பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக் கூடிய போக்கு சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்தைய, சிதைந்து குலைந்து போன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழி/துறை இல்லாமல் போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள். "என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 31

சுதந்திரமாகவும், அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது. வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை. அதுபோலத் தான் வாழ்க்கையெல்லாம்..... "நல்லது செய்; நல்லவனாக இரு. இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்'' என்று கூறிய தேவபுருஷர் புத்தர் ஒருவர் தான்.... மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது. அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்திப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள்.... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 30

ஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன. நாமும் அதுபோலவே இருக்க வேண்டும்.... நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா? அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவை தான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், 'கண்கள்' என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது..... இதய பூர்வமான உணச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத்... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 29

சில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்டிருக்கிறோம்.  மிக அற்புதமான தர்க்க  வாதங்களுடன் உபந்யாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம்.  எல்லாம் மறந்து போகிறது.  வேறு  சில சமயங்களில்  நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம்.  அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன.  நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிவிடுகின்றன.  நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன. தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது.  ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லா போதனைகளிலும் கொடுக்கல்,  வாங்கல் பொதிந்துள்ளது.  ஆசிரியர் கொடுக்கிறார்;... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 28

'மகத்தான பணி ஒன்றைச் செய்யவும் வேண்டும்; சமுதாயத்தின் மனம் கோணவும் கூடாது' என்பது நடவாது. அவ்வாறு முயன்றதில் எவரும் எக்காலத்தும் வெற்றி காணவில்லை. மனச்சாட்சியின் உத்தரவுப்படி ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வேலை சரியானதாகவும் நல்லதாகவும் இருக்குமாயின் சமூகமானது அவனது சொல்லைக் கேட்டு அவனது பாதைக்குத் திரும்பிவிடும்... பாரதத்தில் மூன்று பேர்கள் ஒற்றுமையாக, ஒரு மனதுடன் ஐந்து நிமிடம் வேலை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் அதிகாரப் பதவிக்காகப் போராடுகிறார்கள்; நாளடைவில் இயக்கம் முழுவதுமே இழிநிலைக்குத் தாழ்கிறது. கடவுளே! கடவுளே! பொறாமைப்படாமல் இருக்க நாம் எப்போது தான் கற்றுக் கொள்வோமோ?.... [மேலும்..»]

எழுமின் விழிமின் – 27

ஏதோ சில மதங்களுக்கு நான் விரோதி என்பது உண்மையல்ல. பாரதத்திலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு நான் எதிரி என்பதும் பொய் தான். ஆனால், அமெரிக்காவில் அவர்கள் பணம் திரட்டுவதற்காகக் கையாளும் முறைகளை நான் எதிர்த்து ஆட்சேபிக்கிறேன். ஹிந்துத் தாயானவள் தனது குழந்தைகளை கங்கையில் எறிவதாக ஒரு படம் சித்தரிக்கப்பட்டு, குழந்தைகளின் பள்ளிப் பாடப் புத்தகத்திலே வெளியாகி உள்ளது. இதன் அர்த்தம் என்ன?.... அரேபிய நாட்டு தேவதூதர் நிறுவிய மதத்தைப் போல, இந்தக் கொள்கைகளை தீவிரமாக இறுகக் கடைப்பிடித்து வருகிற மதம் உலகில் வேறெதுவும் இல்லை. இவ்வளவு ஏராளமாக ரத்தத்தைச் சிந்தி பிறரைக் கொடூரமாக நடத்திய மதம் வேறெதுவும் இல்லை....... [மேலும்..»]