எழுமின் விழிமின் – 26

இந்த பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக்கொண்டே இருப்பார். அன்னை காளி மிருக பலியுடன் வழி படப்படுவாள். அன்பிக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான். கிறிஸ்தவ பாதிரியோ, வேறு பாதிரியோ என்னதான் முயன்றாலும் அவர்களை அகற்ற முடியாது. அவர்களை உங்களால் சகிக்க முடிய வில்லை என்றால் தொலைந்து போங்கள்… பாரதத்தின் மேல் வகுப்பு மக்களே! உங்களுக்கு உயிர் இருக்கிறதா? நீங்கள் சிந்திக்கிறீர்களா? பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம் போல் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர்கள் வெறுத்து ஒதுக்கினார்களே, அப்படிப்பட்ட மக்களிடையேதான்…

View More எழுமின் விழிமின் – 26

எழுமின் விழிமின் – 25

நல்லவர்கள் எல்லாச் சட்டங்களையும் மீறி மேலே எழுகிறார்கள். தம்மைப் பின்பற்றுகிறவர்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவர்களும் மேலெழ உதவுகிறார்கள்… ‘கைகளைத் தோள் மேல் தூக்கு, முட்டி போடு, புத்தகத்தை எடு” என்றெல்லாம் திட்டவட்டமாக கட்டளையிட்டு நடத்துகிறார்கள். ஒரு கணநேர அழைப்பில் எனது சமய உணர்சிகளை நான் தயாரித்துக் கொண்டுவிட முடியாது. இந்தக் கேலிக்கூத்து, சமயத்தை விரட்டி ஓட்டிவிட்டது… முகம்மது உலகுக்கு செய்த நன்மை எவ்வளவு என்பதை எண்ணிப் பாருங்கள். அவரது மதவெறியால் விளைந்த பெருந்தீமையையும் பற்றிச் சிந்தியுங்கள்…

View More எழுமின் விழிமின் – 25

எழுமின் விழிமின் – 24

கிறிஸ்து இன்றி கிறிஸ்தவ சமயமும், முகம்மது நபியின்றி முகம்மதிய சமயமும், புத்தரின்றி புத்த சமயமும் நிற்க முடியாது. ஆனால் ஹிந்து சமயம் எந்த ஒரு மனிதனையும் சாராமல் சுதந்திரமாக நிற்கிறது… முகம்மதிய ஆட்சியின் போது வடபாரதத்தில் தோன்றிய இயக்கங்களெல்லாம், படையெடுத்து வென்ற ஆக்கிரமிப்பாளரின் சமயத்தைப் பொதுமக்கள் கைக்கொள்ளாதபடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொதுவான ஒரே லட்சியத்துடன் எழுந்தவையே ஆகும்… மராட்டியர் அல்லது சீக்கியர் இவர்களின் சாம்ராஜ்யத்துக்கு முன்னோடியாக எழுந்த ஆன்மிக அபிலாஷையானது எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது…

View More எழுமின் விழிமின் – 24

எழுமின் விழிமின் – 23

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள்…. எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?.. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது….

View More எழுமின் விழிமின் – 23

எழுமின் விழிமின் – 22

“ஒவ்வோர் இயக்கமும் தனக்கே உரிய ஒரு சிறப்புத் தன்மையினால் வெற்றி அடைகிறது. அது வீழ்ச்சி அடையும் போதே பெருமைக் குரிய அதே சிறப்புத் தன்மை அதனுடைய பலவீனத்துக்கும் முக்கியமான காரணமாக ஆகி விடுகிறது. புத்த பகவான் – மாந்தருள் மாணிக்கம், அசாதாரணமான ஒற்றுமை நிர்மாண சக்தி வாய்ந்தவர். இதன் மூலம் அவர் உலகமே தம்மைப் பின்பற்றும் படி செய்தார். ஆனால் அவரது சமயம் மடாலயத் துறவு வாழ்க்கை நிலையை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். ஆகையால் இந்த சமயத்தில் பிக்ஷுவின் ஆடையைக் கூட மதித்துப் போற்றும் ஒரு தீய விளைவு ஏற்பட்டது. மடாலயங்களில் துறவியர் கூட்டம் கூட்டமாகக் கலந்து வாழும் முறையை முதன்முதலில் புத்தரே ஏற்படுத்தினார். ஆனால் அந்த மடங்களில் ஆண்களை விட பெண்களுக்குத் தாழ்ந்த நிலை தராமலிருக்க அவரால் முடியவில்லை. மடத்துத் தலைவிகள் எவ்வளவு உயர்ந்தவரானாலும் சில ஆண்தலைவர்களது அனுமதியின்றி எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஏற்பாடு தற்காலிகமாக புத்த சமயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியது என்றாலும் அதன் நீண்ட கால விளைவுகள் குறை கூறிக் கண்டிக்கத் தக்கதாகி விட்டன!”

View More எழுமின் விழிமின் – 22

எழுமின் விழிமின் – 21

”சுவாமிஜி! இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்?” என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” …எங்கே உனது நம்பிக்கை? எங்கே உனது தேச பக்தி? கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?….

View More எழுமின் விழிமின் – 21

எழுமின் விழிமின் – 20

கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்… உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம்… உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்….

View More எழுமின் விழிமின் – 20

எழுமின் விழிமின் – 19

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவை எவை நம் இனத்தைப் பலவீனப்படுத்துமோ அவற்றுக்கெல்லாம் நாம் இடங்கொடுத்து விட்டோம்… நாம் வேண்டுவது சக்தி. சக்தி, ஒவ்வொரு முறையும் சக்தியே வேண்டும். உபநிடதங்கள் சக்திக்குப் பெரும் சுரங்கமாகும். உலகம் முழுவதற்கும் வீரம் அளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு… தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உலகியல் செல்வம் வேண்டுமென்றால் அத்வைதத்தின் மூலம் வேலை செய்யுங்கள். அது உங்களை வந்து அடையும். நீங்கள் அறிவிற் சிறந்த மேதாவியாக ஆக விரும்பினால் அத்வைதத்தை அறிவுத் துறையில் உபயோகியுங்கள். அறிவிற் சிறந்த மேதையாவீர்கள்…

View More எழுமின் விழிமின் – 19

எழுமின் விழிமின் – 18

தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவது தான். அதற்கு அடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்… சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன…

View More எழுமின் விழிமின் – 18

எழுமின் விழிமின் – 17

முதன்முதலில் நமது இளைஞர்கள் பலம் உடையவர்கள் ஆக வேண்டும். சமய உணர்ச்சி அதற்கு பிறகு வரும். எனது வாலிப நண்பர்களே! பலம் உள்ளவர்களாக இருங்கள். நான் அளிக்கக் கூடிய புத்திமதி இதுதான். நீங்கள் கீதையைப் படிப்பதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே கூறுகிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். உங்களது கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால் கீதை உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். உங்கள் உதிரத்தில் சக்தி இருந்தால் ஸ்ரீகிருஷ்ணனுடைய பலமிக்க மேதாவிலாசத்தையும், பராக்கிரமத்தையும் உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடை உங்களது கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நிற்க நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும் போது உபநிடதங்களின் தத்துவங்களையும் ஆத்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துணர முடியும்.

View More எழுமின் விழிமின் – 17