
கிருஷ்ணனை அந்தத் துறவியின் முன்னால் கொண்டு வந்து அவருடைய பாதங்களில் கிடத்தினார்கள். கிருஷ்ணனும் பவ்யமாக நமஸ்காரம் செய்துக் கொண்டே துறவியின் பாதங்களை இறுக்கத் தழுவிக் கொண்டார்… நீலமேக வண்ணன் வெள்ளை வெளேரென்றிருந்த பால்பாயாசத்தை உண்ணலானார். என்ன ஒரு கான்ட்ராஸ்ட்! கோமளமான வாயைச் சுற்றிலும் பாயாசம்… இந்த மாளிகையைச் சுற்றி நான்கு வாசல்கள் உள்ளன. ஒரு வாசலுக்கு ஒருத்தர் என்ன இரண்டு பேரைக் காவலுக்கு நியமிக்கிறேன். நந்தகோபரும் அவர்களோடு சேர்ந்து வாசலைக் காப்பார்….