உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

2004ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை மத்தியில் ஆட்சியில்
இருக்கின்ற கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. 2004ல் கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றி உள்ளார்களா என்பதைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவர்களின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். விலைவாசி
உயர்ந்து கொண்டே போகிறது, விலைவாசியைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைப் பற்றி ராகுல்
காந்தி விளக்கமளிக்க வேண்டும்.

View More உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி

முந்தைய ஆட்சியில் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு மீட்டு வர இயலாது என ஓலமிட்ட காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்… அத்வானி பேசிய போது தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு எவரும் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனிக்கும்போது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட பட்டியல் உண்மை என்பது தெரியவருகிறது… போர்களில் இழந்த பகுதிகளை மீட்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் கட்சியா கறுப்புப் பணத்தை மீட்கப் படையெடுக்கும்? ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மீது வரி சுமத்தாமல் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது நல்லது என்கின்ற சிந்தனைகூட இல்லாமல் செயல்படுகிறது…

View More கறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி

தீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி

இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை. ஒவ்வொரு இந்தியனையும் கட்டாயப்படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம். தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லிமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்பது சிமி இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்… திருமதி சோனியா காந்தி, “தீவிரவாதத் தடுப்பு எனும் பெயரில் ஒரு அமைப்பை தடைசெய்வதால் மட்டும் பயங்கரவாத செயலை அடக்க இயலாது. ஆகவே சில அமைப்புகளுக்கு தடைவிதிப்பு ஏற்க இயலாது”…

View More தீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி

வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

”.. ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க தான? பின்ன ஏம்மா எனக்குப் பணம் தரல?” … இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. மதமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் வாக்குகளை அறுவடை செய்ய திமுக தயாராக இருக்கிறது.. ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம்…

View More வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு

(எழுதியவர்: வி. சண்முகநாதன், பா.ஜ.க செயலர்) நம் நாட்டின் சாதாரண குடிமக்கள், ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங்கின் அமைதியான, சீரியசான, சிந்தனையில் ஆழ்ந்த முகத்தைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். இப்படிப்பட்ட அப்பாவித்தனமான தோற்றத்துக்குப் பின்னே, சி.பி,ஐ யினை துஷ்பிரயோஒகம் செய்யும் கையும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

View More சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு

காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]

[எழுதியவர்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)] சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் எந்தப் பல்கலைக் கழகத்துடன் வேண்டுமானாலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் மட்டுமல்லாமல் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரித்தார்கள், இடதுசாரிகளும் ஆதரித்தார்கள். இதை பாரதிய ஜனதாவும், சிவசேனையும் கடுமையாக விமர்சித்தன. முஸ்லிம் கல்வி நிறுவனம், உதாரணமாக ஜார்க்கண்டில் உள்ள ஜும்ரீத் அலியா என்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனம் எந்த மத்திய பல்கலைக்கழகத்துடனும் தனது விருப்பம் போல தன்னை இணைத்துக் கொள்ளலாம். மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பட்டம் பெற முடியும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதும் சுலபமாகும். வெளியிடங்களிலும் இதைக் காட்டி உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.

ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹிந்து மாணவரால் அப்படி…

View More காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]

காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1

[எழுதியவர்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)]. உங்கள் பார்வைக்கு 7 முக்கிய புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஹிந்து வாக்காளர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற அவர்கள் அக்கறையின்றி வாக்களித்து வரும் முறைதான் காரணம் என்பதை இந்தப் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக நன்கு படித்த ஹிந்துக்களின் பார்வைக்கு இந்தப் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இவை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. ஆனால் இதைப்பற்றி நன்கு படித்த ஹிந்துக்களுக்குச் சரியாக தெரியாமல் இருக்கிறது. இதற்கு ஊடகமும் ஹிந்துக்களின் நலனில் உண்மையான அக்கறையற்ற அரசியல்வாதிகளும் காரணம் என்று சொல்வதைவிட…

View More காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1