Posts Tagged ‘ ஐ.நா.சபை ’

வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும். [மேலும்..»]

எல்லையில் மீண்டும் போர்மேகம்

கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி இருக்கிறது.  பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் காலகட்டங்களில் எல்லாம் இந்தியப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. பங்காளி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்தபோதே, இரு நாடுகளிடையிலான பிரச்னைக்கும் கால்கோள் இடப்பட்டுவிட்டது. இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரை சொந்தம் கொண்டாடுவதன் வாயிலாக பாகிஸ்தான் தனது உள்ளூர் அரசியலை வளர்த்து வந்திருக்கிறது. உண்மையில் இந்திய விரோதமே பாகிஸ்தானின் உருவாக்கத்திற்குக் காரணம். அந்த அடிப்படையில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்குப் பெற இந்தியா மீது தொடர்ந்து விஷம் கக்குவது, அங்குள்ள... [மேலும்..»]

பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

பிரேசிலில் நடந்து முடிந்துள்ள ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களுக்கான கால்கோளை இட்டுள்ளது. குறிப்பாக, பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் முக்கியத்துவத்தை வெகுவாக உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கிற்குக் கடிவாளமாக உருவான சிந்தனையே பிரிக்ஸ். 2006-இல் உருவான இக்கரு 20089-இல் ரஷ்யாவின் எகடிரன்பர்க் நகரில் கூடிய முதல் உச்சி மாநாட்டில் நனவானது. ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டுமே அங்கத்தினராக இருந்தபோது பிரிக் (BRIC) மாநாடு என்றழைக்கப்பட்டது. இந்த நாடுகள் அனைத்துமே வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகள். 2011-இல் தென் ஆப்பிரிக்காவும் இதில் இணைந்தபோது ‘பிரிக்ஸ்... [மேலும்..»]

விதியே விதியே… [நாடகம்] – 3

ஐ.நா. தலைவர்: ரெண்டு பிரிவினரும் சேர்ந்து வாழுங்கன்னுதான் சொல்றோம். அந்த நம்பிக்கைலதான் நல்லெண்ணக் குழுக்களை அனுப்பினோம். காயம் பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தோம். அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஏற்பாடு செய்தோம். போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்து பார்த்தோம்... குழந்தை : கூடவே ஆயுதங்களையும் அது வாங்கத் தேவையான பணத்தையும் இரு தரப்புக்கும் அனுப்பியும் வந்தீர்கள். அல்லவா?... ஐ.நா. தலைவர்: வளரும் நாடுகளில் சண்டை நடப்பதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கின்றன. மேற்கு நாடுகள் ஆயுதங்கள் தருகின்றன என்றால் வளரும் நாடுகள் ஏன் அதை வாங்குகின்றன என்ற ஒரு எளிய கேள்வியும் இருக்கத்தானே செய்கிறது?.... குழந்தை... [மேலும்..»]

இவரை மறக்கலாமா?

January 12, 2009
By
இவரை மறக்கலாமா?

ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்... [மேலும்..»]