
மதத்தை மாற்றிக்கொள்ளும் ஒருவர் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்டுவிடுகிறார் என்பது உண்மையே. ஆனால், அவரை எதிரியாகவே நடத்த வேண்டுமா? அவர் இந்து மதத்துக்கு இந்து கலாசாரத்துக்கு திரும்பியாகவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடத்தவேண்டுமா?.. நம் நாட்டில் இருந்தே நம் தேசியத்துக்கு தர்மத்துக்கு கலாசாரத்துக்கு எதிராகப் பேசுபவர்களை உருவாக்கும் எதிரியின் சாமர்த்தியத்தில் ஆயிரத்தில் ஒருபங்கையாவது அயல் நாட்டினரில் நம் கலாசாரத்தை மதிக்கும் நபர்களை முன்னிலைப்படுத்துவதில் காட்டியிருக்கிறோமா?…