Posts Tagged ‘ கடவுள் ’

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். "நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்" என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; ... ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்... [மேலும்..»]

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு. [மேலும்..»]

கடவுளின் பணித்திட்டம்

உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார். [மேலும்..»]

அருணையின் கருணை

ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்... பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார். [மேலும்..»]

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2

வீடு திரும்பும் வழியெல்லாம் மனதில் தோன்றி பின் நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளையே பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு புதிது... நடந்ததை நடந்தபடியாக ஒரு சாட்சியைப்போல் பார்த்துக் கொண்டிருப்பதில் தவறேதுமில்லை; தான் நினைத்ததை நடத்துவதுபோல் எண்ணுவதுதான் தவறு... இறைவனே இல்லை என்றவர்கள், ஒருவனே தேவன் என்கிறார்கள், ஏழையில் காண்போம் என்கிறார்கள். மற்றும் “ஓம் சூர்யாய நமஹ:” என்பதற்கு “ஞாயிறு போற்றுதும்” என்கிறார்கள் அல்லவா? [மேலும்..»]

பணிப்பொன்

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். [மேலும்..»]

பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்

இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்று நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்.... இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது... இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே... [மேலும்..»]

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது - இன்றைய தமிழக முதல்வர் உட்பட... திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்? [மேலும்..»]

கம்பன் கண்ட சிவராம தரிசனம்

January 28, 2010
By

நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை... இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ? [மேலும்..»]

பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, "இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?" என்று பதில் சொன்னார்... பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை. [மேலும்..»]