Posts Tagged ‘ கட்டடக் கலை ’

தாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா? : உண்மை வரலாறு

ஷாஜஹான் ஒருபோதும் தான் தாஜ்மஹாலைக் கட்டியதாக எங்குமே எழுதி வைக்கவில்லை. ஏன்? தாஜ்மஹாலிலேயே கூட ஒரு சிறிய கல்வெட்டு கூடக் கிடையாது. கட்டியிருந்தால்தானே எழுதி வைக்கமுடியும்? இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot... ஷாஜஹானின் அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். மும்தாஜை அவர் திருமணம் செய்து கொண்ட போது மும்தாஜுக்கு 18 வயது. திருமணம் செய்து கொண்ட வருடத்திலிருந்து மும்தாஜ் இறக்கும் வரை 14 பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அதாகப்பட்டது மும்தாஜ் வருடமெல்லாம் கர்ப்பிணியாகவே இருந்தார்.இறுதியில் 14வது குழந்தைப்பிறப்பின்போது மும்தாஜ் இறந்து போனார்...... [மேலும்..»]

கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி

ஸ்தபதி ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். மகாபலிபுரத்தில் வாஸ்து வேத அறிவியல் மையத்தை அவர் உருவாக்கினார். மயனை உலக ஸ்தபதிகளின் ஆதி குருவாக அவர் கருதினார். வாஸ்து அறிவியல் பிரபஞ்ச சூட்சுமங்களை கல்லில் வடிக்கும் ஒரு இசைவியக்கம் என அவர் கருதினார்...”கோவிலே வணங்கப்பட வேண்டியதாகும். இந்த அலகின் அளவுகோலே பிரக்ஞைக்கு வடிவம் அளிக்கிறது. அதுவே ஸ்தூல சூட்சும வடிவங்களை கால-வெளியின் கணிதத்தால் சமைக்கிறது”.... [மேலும்..»]

ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1

April 7, 2011
By

கருங்கல் தூண்களை எப்போது கிரானைட் போட்டு மறைத்தார்கள், அந்த மகா ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் கூட வந்த பெரியவர்... அரங்கனைப் பார்த்தவுடன் அதில் மூழ்கி நாம் திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் தத்தளித்து விடுவோம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க இந்தத் தூண் பற்றுதலாம்... ஆறாயிரத்துச் சொச்சம் பக்கங்களில், ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார். [மேலும்..»]