
கடந்த சில வருடங்களாக ஜடாயு எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம் கொண்டு சமூகம், வரலாறு, கலை, கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகள் இதில் உள்ளன. ராமாயணத்தின் பரிமாணங்கள், ஐயப்ப வழிபாட்டின் வேர்கள், சைவசமயம் குறித்த விவாதம், சிற்பக்கலைத் தேடல்கள், ஹிந்துத்துவம், மதமாற்றம், சாதியம், சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இவற்றின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன. நீண்ட நெடிய வரலாறு கொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும், நிகழ்காலத்தின் சமூக, கலாசாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வையை இவை அளிக்கின்றன….