Posts Tagged ‘ கணேசர் ’

ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது... உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு? யானைகளை கோவில்களில்... [மேலும்..»]

விநாயகர் நினைவுகள்

விநாயகர் நினைவுகள்

கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன. நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட பல கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது... பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார்... பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து... [மேலும்..»]

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு.. [மேலும்..»]

எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

September 20, 2010
By

கோவையில் விநாயகர் சிலைகளை ஏற்கனவே வைத்து வழிபட்ட இடங்களிலும் கூட அனுமதி மறுத்தது காவல்துறை. பல இடங்களில் முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது... முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.. குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர்.... இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் அவர்களின் பிரத்யேக பேட்டி, மற்றும் கண்கவர் விநாயகர் ஊர்வல புகைப்படங்கள்... [மேலும்..»]

அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்

ஒன்றே பரம்பொருள் எனினும் பரம்பொருள் நாட்டங்களும் தேட்டங்களும் பல திறத்தின. திருவுருவங்களில் பரம்பொருள் ருசி கண்டவர்க்கும் காண முயல்வோர்க்கும் அநுகூலமான, அழகிய திருவடிவம் விநாயகப் பெருமானின் விசித்திர வடிவம். இத்திருவுருவம் ஏழு தேசங்களின் அஞ்சல் பூக்களில் எழிலுடன் இடம் பெற்றுள்ளது. பாரதம், நேபாளம், ஸ்ரீலங்கா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, செக் - என்பன அத்தேசங்கள். [மேலும்..»]

சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

.. விநாயகர் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தை நோக்கி (சில நேரங்களில் அறியாமையால் நாம் தயங்கி நின்றால் கூட) இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது... சிலை வழிபாடு பற்றிய கேள்விகளை எழுப்பி, அதன் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியலை விளக்கும் ஒரு தமிழ் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் - இங்கே ... [மேலும்..»]

வலம்புரி நாயகன்

September 3, 2008
By
வலம்புரி நாயகன்

வயிருபெ ருத்தவ லம்புரி நாயகன்
வேண்டுவ ரந்தருவான்
கயிறுபி டித்தக ரங்களி னாற்பகை
கடிந்துவி ரட்டிடுவான்.

ஆரணப் போருளனுக் கன்புடன் மோதகம்
ஆக்கிப் படைப்பவர்க்குப்
பூரண வாழ்வினைப் பூமியில் தந்திடும்
பூரண னவனாவான்.

[மேலும்..»]

வேண்டியதை அருளும் விநாயகன்

வேண்டியதை அருளும் விநாயகன்

இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “என்னப்பா… பரீட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்கே…”, அதற்கு அடுத்தவன் அலுத்துக்கொண்டான்… “என்னவோ போ… கணக்கு பரிட்சைய நினைச்ச பயம்மா இருக்கு. பிள்ளையாருக்கு தேங்கா உடைக்கறதா தோப்புக் காரணம் போட்டுப் பிரார்த்தனை எல்லாம் செய்துகொண்டு இருக்கேன்..”. அதற்கு அடுத்தவன் “அது சரி. அதான் பிள்ளையார்க்கிட்ட வேண்டிக்கிட்ட இல்ல.. அவரே எழுதி கொடுத்துடுவார்”. இவன் “ஆமா.. முதல்ல அவரே கணக்குல வீக்கா இருந்தா என்ன செய்யறது?” என்று சிரித்துக் கலைந்தார்கள். எங்கே பிரார்த்தனை செய்கிறோமோ இல்லையோ, பரீட்சை வந்தால் பிள்ளைகளெல்லாம் பிள்ளையாரிடம் ஒரு ஆப்ளிகேஷன் போட்டுவிடுவது வழக்கமாக இருக்கிறது. பிள்ளையார் அவ்வளவு சுலபமான தெய்வமாக... [மேலும்..»]