மனதிற்கினியதும், வசீகரமானதும், ஆழமான தத்துவ உட்பொருள் கொண்டதுமான பிரம்ம மோகன லீலை ஶ்ரீமத்பாகவம் பத்தாவது ஸ்கந்தம் 13-14 அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. மாயத்தால் கண்ணனுடன் விளையாட பிரம்மா பின்பு தானே மாயச்சுழலில் சிக்கி திகைத்து நிற்பதும் இதில் வருகிறது. அதைப் பற்றியது ஜடாயுவின் இந்த உரை…
View More ஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்Tag: கண்ணன்
ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்பு
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவின் ஓர் அங்கமாக பாகவதத்தின் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை விசேஷமாக வாசிப்பது என்பது பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது… நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமே கண்ணன் அருளமுதம் தான், ஆயினும் கிருஷ்ண ஜயந்தி என்றால் அது பெரியாழ்வாருக்கு உரிய நாள்…
View More ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்புஅழ. வள்ளியப்பாவின் கண்ணன் பாட்டுக்கள்
எனக்கு மிகவும் பிடித்த முதல் கவிஞர் அழ.வள்ளியப்பா தான். அவர் பாடல்கள் தொகுப்புகளை படித்தால் ஒன்று தெரியும். அவருக்கு கண்ணனிடம் அலாதி அன்பு. கண்ணனை பரம்பொருளாக, தோழனாக, கீதை அளித்த நல்லாசிரியனாக குழந்தை பருவத்தில் நமக்குள் கோவில் கொள்ள செய்தவர்களில் அழ.வள்ளியப்பா முக்கியமானவர். முதன்மையானவர்… அவரது சில அற்புதமான கண்ணன் பாட்டுக்கள் அவை புத்தகத்தில் வெளிவந்த அதே வடிவில் கீழே..
View More அழ. வள்ளியப்பாவின் கண்ணன் பாட்டுக்கள்சாணக்கிய நீதி – 5
நமக்கு நேரில் போரிடும் எதிரியைவிட, நம் முதுகில் குத்த முயலும் அணுக்கரிடம்தான் நாம் கவனமாக இருக்கவேண்டும் என அரச தந்திரிகளும் அறிவுரை கூறுகின்றனர். நண்பன் என்று போற்றப்பட்ட புரூட்டஸும், ஜூலியஸ் சீசரை இறுதியில் கத்தியால் குத்திக் கொன்றதும் வரலாறு. அப்படிப் பட்டவர் பாலில் நஞ்சைக் கலந்து கொடுக்கவும் தயங்கார்.
View More சாணக்கிய நீதி – 5தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி
ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்… நக்கீரர் பாடிய புறநானூறு (பாடல் 56) தெளிவாக சிவன், திருமால், முருகன் ஆகியோரது தெய்வ அடையாளங்களைக் கூறுகிறது. இதற்கும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்…..
View More தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடிநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்
சிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர்
ஒளிரும் கண்களாம் மலரிலே
பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல்
அனைய அலைக்குறும் புருவமும்
கவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில்
கருணை கருமணி அழகுடன்
உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா
கடையன் விழைகிறேன் அருளுவாய் ….
தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்
இத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன். கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன். “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார்? பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன்? எனவே, எனது குரு குற்றமற்றவர்!” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.
View More தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்
சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் – வேற்றுமையற்றவன் – பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் – சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் – சத்தியப்பொருளென அறியப்படுபவன்… அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?…
View More ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்
காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன.தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை. வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும், ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது… பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது? “அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இவ்வாறு பாடியிருக்க முடியும்?” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல.. ஆண்டாள் தவிர வைணவத்தில் மூன்று பெண்களின் சொற்கள் புனிதமாகக் கருதப்படுபவை. அவை மும்மணிகள் ரகசியம் எனப்படும்…
View More காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்
புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது… கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்… எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே…
View More பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்