Posts Tagged ‘ கந்த சஷ்டி ’

கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு

எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது... நேர்மறையானதொரு எதிர்வினையாக பாரதி தமிழ்ச் சங்கம் ஜூலை 19 மாலை 6:00 மணிக்கு இணையம் வாயிலாக நடத்திய நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்தனர்... [மேலும்..»]

கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு

பல அச்சுப் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் காணப்படும் கந்தர் சஷ்டி கவசம் நூற்பிரதியில் பல்வேறு பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதைக் கண்ணுற்ற கவிப்பெருஞ்சுடர் ஹரி கிருஷ்ணன் அவர்கள், "கண்ணுக்குத் தெரிந்த பிழைகளைக் களைந்து கூடுமானாவரை பிழையற்ற பதிப்பாக ஒன்றை இணையத்துக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்" என்று ஃபேஸ்புக் மூலம் முன்னெடுத்து, சைவ அறிஞர் ஜாவா குமார் மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் இந்தத் திருந்திய வடிவத்தை வழங்கியிருக்கிறார். இதனை நமது வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்... [மேலும்..»]

அளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்

குமரன் தன் பிஞ்சுக் கைகளால் சப்பாணி கொட்டுகிறான். இவன் சப்பாணி கொட்டக் கொட்ட என்ன நடக்கிறது? எட்டுக் குல மலைகளும் குலுங்கிப் பாதிப் பாதியாக விழுகிறது! மேரு மலையும் அதிர்வடைகிறது! தேவர்கள் நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. நாம் உய்ந்து போனோம் என்று சந்தோஷமடைகிறார்களாம்... "இப்படிக் கேட்டால் சொல்ல மாட்டேன் முறைப்படி நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் சொல்லுவேன்" என்கிறான் குமரன். மைந்தன் சொன்னபடியே. சீடனாகக் கீழே அமர்ந்து பணிவோடு உபதேசம் பெறுகிறான் தந்தை... "கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண் குறிப்பறிந்து அருகணைந்து, உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கு எனக் குறையிரந்து, அவள்... [மேலும்..»]

அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்

கந்த சஷ்டி முருகனின் விழா. முருகனை ’அக்னி புஷ்பம்’ என்பர். அந்த அக்னி புஷ்பத்தை அக்னிச் சிறு பேழைகளின் முகப்பு எவ்வாறு சித்தரிக்கிறது? பேரா.என்.சுப்ரமணியத்தின் ‘அமுதசுரபி’ நூலகத்தில் உள்ள தீப்பெட்டி பட சேகரிப்பில் இருந்து ஒன்பது சித்திரங்கள்... [மேலும்..»]

கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை

முருகன் திரு அவதாரம். திரு விளையாடல்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கைகளின் சிறப்பு, சூர சம்ஹாரம், இருவர் திருமணம், தசாங்கம், வேண்டுகோள் எல்லாவற்றையும் 122 அடிகளில் இந்த செந்தமிழ்ப் பாமாலையில் சிறப்பாகப் பாடியுள்ளார் குமரகுருபரர்... கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து, மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால் அகத்துண் மகிழ்பூத்தளித்து... போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகமளிக்கும் முகமதியும் — தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்தருளும் தெய்வ முகத்தாமரையும்... பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சமகற்றும் அயில் வேலும்... [மேலும்..»]

வள்ளிச் சன்மார்க்கம்

முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விளக்கும் திருப்புகழ் பாடல்களில் சிருங்கார ரசம் கொப்பளித்துப் பொங்குகின்றது... நற்பண்புகளையுடைய தம்பதியரிடையே அமைந்த நற்காமம் பத்தியாக, சிவ- சக்தி ஐக்கிய அனுபவமாக அமையும்...அவரவர்க்கு உகந்த மார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகி இறையருளைப் பெற வைதிகம்,இந்து தருமம் அனுமதிக்கின்றது... கந்த சஷ்டி விரதத்தை வள்ளி திருக்கலியாண மகோற்சவமாகக் கொண்டாடி.. [மேலும்..»]

அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

அருணகிரிநாதரின் ஜனனம் எப்படி, எப்போது ஏற்பட்டது? தாய் தந்தையர் யாவர்? பரவலாக கூறப் படுவது போல அவர் தன் வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்தனரா? மேலும் பல நம்பிக்கைகள், ஐதீகக் கதைகள்.. இவற்றை எல்லாம் மீள்பார்வை செய்ய தூண்டும் கட்டுரை... [மேலும்..»]

சூரசம்ஹாரம்

நேற்று சூரசம்ஹாரம் எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது. சூரசம்ஹாரம் என்பது தீமையை புனிதம் வெல்லும் ஒரு திருநாள். இத்திருநாள் நமக்கு அளிக்கும் நம்பிக்கை சொல்லில் அடங்காதது. இத்தினத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்வதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சி அடைகிறது. [மேலும்..»]