கம்பன் கண்ட சிவராம தரிசனம்

நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?

View More கம்பன் கண்ட சிவராம தரிசனம்

அக அழகும், முக அழகும் – 2

போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது…. சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்?

View More அக அழகும், முக அழகும் – 2

அக அழகும், முக அழகும் – 1

குழந்தை முருகனின் தூய பேரெழில் சூரன் உள்ளத்தில் இருந்த அக இருளை, அஞ்ஞான இருளை அகற்றி புதிய ஞானத்தை உண்டாக்கி விடுகிறது…. அதுவே கருமையும், தண்மையும், இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இந்நான்குமே ஒன்றாக அமைந்த இராமனுடைய பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆனது….

View More அக அழகும், முக அழகும் – 1

கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம்.

View More கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு

கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

“அற்புதமாக, உருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். கம்பனையே முக்கியமாகப் பேசவிட்டு தேவையான இடங்களில் மட்டும் உங்கள் மணியான விளக்கங்களைத்
தருகிறீர்கள்.. அருமை.

இந்தக் கட்டத்தில் வரும் முக்கியமான ஒரு பாடலைக் குறிப்பிடுவீர்கள் என்று பார்த்தேன். .. தங்களை அது கவரவில்லையோ..”

View More கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

கம்பனின் கும்பன் – 3

“அதுதான் அவன் கும்பனுக்களித்த standing ovation. கம்ப இராமாயணம் முழுவதிலும் வேறெங்கும் பார்க்க முடியாத இராமனின் மெய்ப்பாடு. ஒரு போர்வீரனாக, கடமையே கண்ணினாகத் தொண்டாற்றிய பிறகு, இராம பக்தனாகவே காட்சியளிக்கிறான் கும்பகன்னன்.

View More கம்பனின் கும்பன் – 3

கம்பனின் கும்பன் – 2

” அண்ணனே, இந்த உலகினைப் பேர்த்து எடுக்கலாம். அல்லது உலகைச் சுற்றி ஒரு வேலி போடவும் செய்யலாம். ஆனால், இராமனை வெல்வது என்பது எளிதா? “

View More கம்பனின் கும்பன் – 2