[பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்

“வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்நாடு அழிந்தே போகும்… கம்யூனிசமும் சுதந்திர ஜனநாயகமும் ஒன்றிணைந்து செயல்படும் என்று கூறப்படுவது அறிவுக்குப் பொருந்தாக் கூற்று… இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை வளர்க்க பிராம்மண இளைஞர்களை நம்பியது ரஷ்யர்கள் செய்த பெரும் தவறு… நான் கம்யூனிசத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை; என் கட்சி எக்காரணத்தைக்கொண்டும் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைக்காது… பௌத்தமதம் மார்க்சுக்கும் அவரது கம்யூனிசத்துக்கும் ஒரு மாபெரும் சவால்…”

View More [பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்

[பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்

“…மதத்தை அலட்சியமாக நினைக்கும் இளைஞர்கள் எனக்கு மிக மிக வருத்தத்தைத் தருகிறார்கள்…. சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வதுபோல் மதமே தேவையில்லை என்று தான் நம்பவில்லை…. மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை. நீதி, தர்மசாஸ்திரங்களைப்போல மனிதகுலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது… கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காகச் சுரண்டுபவர்கள். நான் அவர்களின் பரம்பரை எதிரி…”

View More [பாகம் -27] நான் கம்யூனிஸ்டுகளின் பரம்பரை எதிரி – அம்பேத்கர்

ஸ்டாலினும், கைவிட்ட கடவுளும்

இந்த வழக்குகளில் சதிகாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதில் விஞ்ஞானிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜெனரல்கள், சிறந்த சங்கீத கலைஞர்கள்… ஆனால் இவ்வளவையும் கண்மூடித்தனமாக முதலாளித்வ நாடுகள் செய்யும் பொய்பிரசாரம், என்றே சொல்லிவந்தனர்… ஸ்டாலினின் அதிகார வேட்கையும் அதை அவர் சாதித்துக்கொண்ட முனைப்பும், அவர் பெற்ற தொடர்ந்த வெற்றியும் எனக்கு தமிழ் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தையே நினைவுறுத்தும்…

View More ஸ்டாலினும், கைவிட்ட கடவுளும்

[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை ?

அப்போது சோவியத் யூனியம் ஓகோவென்று இருந்தது…ருஷ்யாவைப் பற்றி மகோன்னதமான பிம்பங்கள் இருந்தன…அந்தக் காலக்கட்டத்தில் ருஷ்ய கம்யூனிசத்தைப் பற்றி சுவாமிஜியிடம் கேட்டோம். சுவாமிஜி மிக அழகாகப் பதில் சொன்னார்கள்…“சுவாமிஜி, இவ்வளவு பெரிய சொத்து நமக்குக் கிடைக்கிறது. நாம் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ட்ரஸ்ட்டின் நோக்கம் என்ன? மத்தியானம் சாப்பாடு இலவசமாகப் போடுவது. அவ்வளவுதானே?”…

View More [பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை ?

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3

தெற்குப் பகுதியில் அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது… குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டனர் ..எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடானிய (நூபிய) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக் கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது.

View More சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2

.வடக்கில் இருப்பவர்கள் 10 டிகிரி பூமத்திய ரேகைக்குக் கீழேயும், தெற்கில் இருப்பவர்கள் 8 டிகிரி பூமத்திய ரேகைக்கு மேலேயும் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் சூடான் இரண்டாகப் பிரியக் காரணமாக அமைந்தது.{..}.கிறித்துவம் எங்கெல்லாம் புக முடியாதோ அங்கெல்லாம் மிஷ-நரிகள் ஆட்கொல்லிக் கிருமியான கம்யூனிஸத்தை நுழைத்து அந்நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர். கலாச்சார அழிப்பு நடந்தபின் மத மாற்றம் வெகு சுலபம் அல்லவா? சுருங்கச் சொன்னால் 90 சதவிகித நாட்டில் கம்யூனிஸ்டுகள் கிறித்துவ மிஷ-நரிகளுக்கு முகமூடியாகத்தான் பணியாற்றுகின்றனர்.

View More சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2

சீனா – விலகும் திரை: ஒரு பார்வை

சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை..

View More சீனா – விலகும் திரை: ஒரு பார்வை

சீனா – விலகும் திரை

நமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல… எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.

View More சீனா – விலகும் திரை

இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1

அமேரிக்கா பல வரலாற்று தவறுகளை செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கம்யூனிஸ்டுகள் அட்டூழியங்களை மட்டுமே செய்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். தவறுகளையும், அட்டூழியங்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதை இந்தியர்கள் கைவிட வேண்டும்… இந்தியாவின் இறையாண்மை, இந்தியர்களின் முன்னேற்றம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்குத்தான் நாம் ஒரு அரசை பதவியில் அமர்த்துகிறோமே தவிர, மற்ற நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவும் நம் நாட்டின் தேவைகளை மறப்பதற்காகவும் அல்ல….

View More இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1

இந்துத்துவ முத்திரை

‘உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்’… சாரு நிவேதிதா அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே? அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் – இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட!

View More இந்துத்துவ முத்திரை