திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை

ஒரு காங்கிரஸ் ஆளூ ஓட்டு கேட்டு பேசிகினாரு. முழ்ஷா பேத்தல் சார். ஆனா இன்னா ஒன்னு, கட்சீல ஜெய் ஹிந்த் அப்டீன்னு முட்சிகினார். நம்ம கூட ஒரு திமுகா தோஸ்த் இர்ந்துகிணு ஜோரா விசில் உட்டார். நான், ‘இன்னாத்துக்கு இப்பொ விசிலு வுட்ற, சுத்த பேத்தலுக்கா’ ன்னு கேட்டென். ‘நம்ம கூட்டணி ஆளு, அதுக்கோசரம்’னார். [..]

View More திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை

தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?

பணி நியமன ஆணை வழங்கப்படும் போதுதான் உளவுத் துறைக்குத் தெரிந்தது, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 42 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இந்த 42 பேருக்கும் ஆளும்கட்சியின் இஸ்லாமியப் புள்ளி பரிந்துறை செய்ததும்… என் மீதான வழக்கில் (த.கிருஷ்ணன் கொலை வழக்கு) நான் விடுதலையாவதற்கு அமைச்சர் பெரியசாமி செய்த உதவிகளை மறக்க முடியாது என்கிறார் அழகிரி… ஆளும்கட்சியின் நெருக்கடியின் காரணமாக, சில தினங்களுக்குள், பிடிப்பட்டது ரேஷன் அரிசி கிடையாது என அந்தர்பல்டி அடித்தார் மாவட்ட ஆட்சியாளர்.

View More தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?

தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? . இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, “ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!” என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?

View More தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை

கிழிந்த ரூபாய் நோட்டானாலும் வங்கியில் செலுத்துவதற்குரிய தகுதி கொண்டிருப்பது மதிமுக என்பதில் ஐயமில்லை. அதனால் தான் அன்புச் சகோதரி முதற்கொண்டு தானைத்தலைவர் வரை பலரும் வைகோவுக்கு மடல் எழுதி இருக்கிறார்கள். பிறருக்கு மடல் எழுத வேண்டிய நிலையில் இருந்த வைகோவுக்கு இந்நிலை ஏற்பட்டது ஏன் என்று பார்ப்பதும் அவசியம்.

View More தேர்தல் களம்: ‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை

தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி

திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையிலான ஊடலும் கூடலும் தேர்தல் காலத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, சுயமரியாதைச் சுடரொளியாம் கருணாநிதி நடத்திய அபத்த நாடகம் ஆளும் கூட்டணியின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்தியது… ஒரே நாளில், கருணாநிதிக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு எதிரானதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை ஜெயலலிதா தவிர வேறு யாருக்கேனும் வாய்க்குமா என்பது சந்தேகமே… அல்லது, மக்கள் வெற்றி- தோல்வி பற்றிய எந்தக் கவலையும் இன்றிக் களம் காணும் பாஜகவை சிறிது திரும்பிப் பார்க்கலாம்…

View More தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி

தேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா? – 1

ஒருபுறம் பணத்திற்காகக் கொலை கொள்ளை நடந்தாலும், மறுபுறம் ஆயுதக் கடத்தல், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பிய சம்பவங்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் சட்டத்தை வளைத்த கொடுமைகளும் திமுக ஆட்சியில் நடைபெற்றன… 2006-இல் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய அராஜகம் நீதிமன்றம் வரை சென்று சந்திசிரித்தது. மருத்துவர் ச. ராமதாஸ்- “காவல் துறையினருக்கும் கிரிமினல்களுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படும் வரை இது நீடிக்கும்; தமிழகம் அமைதிப் பூங்கா என்று வசனம் பேசி வந்தோம், இனி அவ்வாறு பேச முடியாது..”.

View More தேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா? – 1

தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிக மோசமான, ஊழல்மயமான, கீழ்த்தரமான அரசு என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்ட மன்மோகன் அரசுக்கு, இனிமேலும் தி.மு.க.வைக் காப்பது முடியாத காரியம் என்பது புரிந்துபோனது. ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கிலாவது காங்கிரஸ் வெல்ல வேண்டுமானால், ‘ஊழலை சகிக்க முடியாது’ என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காங்கிரஸ் புரிய வைத்தாக வேண்டும் […]

View More தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ

இன்னல்கள் அனுபவிக்கிறது உன் குடும்பம். இசை விழா நடத்துகிறது இத்தாலிய குடும்பம்.

View More கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ

ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

காலம் கடந்த நடவடிக்கையே என்றாலும், மத்திய அரசின் முகமூடியைத் தோலுரிக்கவும், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அவசியத்தை உணர்த்தவும் ராசா கைது உதவி இருக்கிறது… ராசா தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் சி.பி.ஐ.-யிடம் சொல்லி பலிகடா ஆகாமல் தப்பிக்க வேண்டும்… கிடைத்த லாபப்பணம் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நகராச் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மத்தியில் உள்ள சோனியாவை எதிர்ப்பது ஆபத்து என்பது எம்.ஜி.ஆரையே ஏமாற்றிய கருணாநிதிக்குத் தெரியாதா?… எனவே தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி, ‘ராசா (மட்டும்) குற்றவாளி இல்லை’ என்று நாமும் ஏற்போம்…

View More ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?

View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2