திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

ஹைதர் அலிக்கும், திப்பு சுல்தானுக்கும் திண்டுக்கல்லில் மணீமண்டபம் அமைக்கப் படும் என்று தமிழ்க முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.. மதவெறியர்களான, வன்முறையாளர்களான இந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமிழக அரசாலும் மக்களாலும் போற்றத் தகுந்தவர்களா? வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. ஜெர்மன் மிஷநரி எழுதுகிறார் – ”திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”…. நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள்… யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை ஆளப்பட்டு வந்தது. திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது. அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது…. திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்… .

View More திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

இந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012

அதி நவீன அறிவியல் தொழில் நுட்பத்திலும் சரி, இராணுவ தயாரிப்பு நிலையிலும் சரி, தான் யாருக்கும் சளைத்ததல்ல என்று இந்தியா நிரூபித்து விட்டது.. இந்த அளவு தீர்க்கமான வரலாற்று, கலாசார பிரக்ஞையுடன் ஒரு தமிழக முதல்வர் செயல்படுவது தமிழக மக்களுக்குக் கிடைத்த வரம்!… எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக கிறிஸ்தவமயமாக்கி விட்டிருந்தனர். எல்லாக் கூட்டங்களிலும் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை எழுதப் படாத விதி போல… கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) இருந்து மதரஸாக்கள், வேதபாடசாலைகள் இரண்டுக்கும் விதிவிலக்கு – ஏன்?.. பாஜகவின் மாபெரும் மதுரை மாநாட்டை வேண்டுமென்றே தமிழக ஊடகங்கள் புறக்கணித்து இருட்டடிப்பு செய்கின்றன…

View More இந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012

இந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)

மகேந்திர கிரி மலைத்தொடர்கள் பின்னணியில் கம்பீரமாக ஆசி வழங்க, சீருடை அணிந்த ஸ்வயம்சேவகர்கள் 16,000 பேர் அணிவகுத்து நின்றனர்…. உத்தபுரத்தில் இரு தரப்பினரும் இந்த சாதி மோதல் தொடர்பாக தாங்கள் போட்டிருந்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர்…உல்லாச சுற்றுலாத் தலமாக மட்டுமே இந்தியர்களால் கருதப் பட்டு வந்த இந்த சின்ன தீவில் இஸ்லாமிய மதவெறி வளர்ந்து மிக மோசமான பரிணாமத்தை எட்டியுள்ளது… பள்ளி ஆண்டு விழாவில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் இந்து கடவுளர்களை திட்டமிட்டு இழிவுபடுத்தி நாடகம் போட்டார்களாம்…

View More இந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)

அட்சய பாத்திரம்

குழாயில் கொட்டும் சாம்பாரையும் சறுக்குமர வாய்க்காலில் சறுக்கிவரும் சாதத்தையும் ஆவி பறக்க ஹாட்கேஸ்களில் பாக் செய்யும் பணி.. வரிசையாக அணிவகுத்து நிற்கும் அவைகள் நிரப்பப்பட்டவுடன் பெல்ட் கன்வேயரில் பயணித்து முனையில் அதனைத் தொட்டுக்கொண்டிருக்கும் லாரியில் ஏறுகிறது. இந்த ஹாட்கேஸ்கள் அசையாமல் இருக்கும் வசதியுடன் அமைக்கப் பட்டிரும்க்கும் அந்த லாரிகளில் முதலில் தரவேண்டியது கடைசியில் என்ற ரீதியில் அடுக்கப்பட்டபின், ஒரு செக்யூரிட்டியுடன் பறக்கிறது. அந்த வினாடி முதல் லாரியின் போக்கு ஜீ.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. செல்லுமிடம் பெங்களூரு நகரின் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள். தயாரிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு.

View More அட்சய பாத்திரம்

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?… பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்…

View More கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்? எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின்
பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்! 1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள். தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.

View More வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்