Posts Tagged ‘ கர்நாடகா ’

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

September 3, 2014
By
இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

லோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு உள்பட்ட 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளன. இத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றாலும், அக்கட்சி 3 மாதங்களுக்கு முன் பெற்ற மக்கள் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் சிறு ஏமாற்றம் ஏற்படவே செய்கிறது. சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் ஆக. 25-ல் வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாகப்... [மேலும்..»]

ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

January 4, 2014
By

மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன.... கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன... சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே... [மேலும்..»]

ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

December 31, 2013
By

பயணம் கிளம்பியதும், முதலில் இறங்கிய இடம் சித்ரதுர்கா கோட்டை.. ஏழு சுற்றுகள், பதினெட்டு கோயில்கள், தோரண வாயில்கள், பண்டக சாலைகள், விழா மண்டபங்கள், குருகுலம், குளங்கள், சுனைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ரகசிய வாயில்கள் என பற்பல பகுதிகளைக் கொண்ட கோட்டையை ஏறி இறங்கி சுற்றி வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும்... கொண்டாட்டங்கள், மாபெரும் வீரச் செயல்கள், சிலிர்ப்பூட்டும் தியாகங்கள், சதி வலைகள், காதல்கள் எல்லாம் கலந்து பெருமூச்சு வரவழைக்கும் கதைகள். கோட்டையிலிருந்து இறங்கும் போது வரலாற்றின் திசை மாற்றங்களை யோசித்துக் கொண்டே வந்தேன்.. [மேலும்..»]

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

”பி.பி. ஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். பல மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டு, அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம்” என்று 2012 டிசம்பரில் வந்த கடிதத்தில் கண்டிருந்தது.. ஆச்சரியமாக இருந்தது. இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?.... ”அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம்.... [மேலும்..»]

மக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…

பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த தேவே கவுடாவின் கட்சியும் காங்கிரசும் திரைமறைவில் நடத்திய சதிகளைக் கைவிட்டுவிட்டு, நேரடியாகவே களமிறங்கி நடத்திய கூத்துக்கள் மீனுக்கு காத்திருந்த கொக்கு போல, உடனடியாக கர்நாடகா அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பிய கவர்னர் [மேலும்..»]