Posts Tagged ‘ கலாசார சீரழிவு ’

திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல்.தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது... திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம்.... [மேலும்..»]

முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்

ஆதாரம் இல்லாத பொய்யான ஆபாச செய்திகளை இந்துத்துவ இயக்கத்தவர்களோடு தொடர்பு படுத்தி வெளியிடுவது, போலியான செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவது உள்ளிட்ட கருத்து வேசித்தனத்தில் ஊறியவை ஊடகத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்கள். இவற்றை முற்போக்கு முத்திரைக்காகவும், மதசார்பின்மை மன நோய் காரணமாகவுமே செய்கிறார்கள் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன் பின்னால் இருப்பது பிரமாண்டமான மத மாற்ற வியாபாரத்தின் கரங்கள்.... கர்நாடக பாஜகவினர் பார்த்த ஆபாச நடனம் என்ற பெயரில் வெளியிட்ட பொய் செய்தி, Kaமல ஹாசன் ராமனுஜர் பற்றி உதிர்த்த முத்துக்கள், அவரின் அருந்தவ புதல்வி என் தகப்பனார் இதழோடு இதழ்... [மேலும்..»]

ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா

சோழனையும் பாண்டியனையும் விட்டுத் தள்ளுங்கள், கற்பனையாகவே இருந்து தொலையட்டும். இந்திய ராணுவம் எவ்வாறு வியட்நாம் சென்று ஆயிரக் கணக்கில் மக்களை சுட்டுத் தள்ளுகிறது?... இந்த அரைவேக்காடுகள் பழைய தமிழர் வரலாற்றை நினைத்தபடி பயன்படுத்தி இருப்பது, கார்த்தி ரீமாவிடம் வாங்கிய கன்னத்து அறையை விட வலி தருகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை வேறு மொழிகளில் எடுத்திருந்தால் அங்கு பிரளயமே நடந்திருக்கும். நாம் ஜடங்களாக, வெ(ற்)றிப் படத்தைப் பார்த்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்... [மேலும்..»]