Posts Tagged ‘ கலை அங்கீகாரம் ’

பாரதி மரபில் ஜெயகாந்தன்

பாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது... பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு. சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற... [மேலும்..»]

உண்மையான ரசிகன்

என்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து 'உலாத்திக்' கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா? ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே? நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா?... திடீரென்று ஒரு சலசலப்பு! பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது....... [மேலும்..»]

பரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை

கர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமான புலம்பல் என்பது, இக்கலையின் மீதான இளைய தலைமுறையினரின் அக்கரையின்மையும், பொது மக்களின் ஆர்வமின்மையுமே... இதற்கு பதில் என்னவாகத் தான் இருக்கமுடியும்? நாள்தோறும் முன்னேறிவரும் டெக்னாலஜியை பயன்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல இசையை அவர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்க்க முடியும். மனமிருந்தால். உண்மையான அக்கரையும், முனைப்பும் இருந்தால் சாதித்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது. இதற்கான ஒற்றை பதிலாக இருப்பது "பரிவாதினி". கர்நாடக இசைக்கு கிடைத்த ஒரு மாபெரும் கொடை. இதன் பின்னணீயில் இருப்பவர்களின் இசை அறிவும், ஆர்வமும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று....பெரும்பாலான அரசியலியக்க செயல்பாட்டாளர்கள் கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களது... [மேலும்..»]

அஞ்சலி: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்

September 20, 2014
By

ஒவ்வொரு மீட்டலிலும் சுருதியும் லயமும் ஜீவனும் சேர்த்து கோடானு கோடி சங்கீத ரசிகர்களின் உள்ளங்களை மீட்டிய அந்த உயிரின் இழை அறுந்து விட்டது. 1978ல் நம் இசை பிரபஞ்சத்துக்குள் வந்த மாண்டலின் என்ற வாத்தியம் எப்போதைக்குமாக ஆழ்மௌனத்தில் ஆழ்ந்து விட்டது. ஆனால் அது உயிர்ப்பித்து நடமாட விட்ட ஸ்வரங்களுக்கு அழிவில்லை. அவை என்றென்றும் இந்தப் புவியின் இசை மண்டலத்தில் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருக்கும்... அவரது இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என்றோ அல்லது நடைபெற வேண்டும் என்றோ ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லையே. இது வரை தமிழ் நாட்டில் அரசியல்வாதி அல்லாத, சினிமாக் கலைஞர் அல்லாத... [மேலும்..»]