Posts Tagged ‘ கல்விக்கூடம் ’

நமது கல்வித் துறையில் பத்து குறைகள்

September 17, 2020
By

அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான்... தரமற்ற கல்வி ஒரு சுமை. இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை... ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை.... [மேலும்..»]

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

உயர் கல்வியை பொறுத்தவரையில் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுவதே சரியானது. இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்களே - என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. 20 வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று 6-7ம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம்... [மேலும்..»]

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2

”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்... பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதிகள் உள்ளன. மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, ... [மேலும்..»]

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1

தங்கள் சமூகத்தில் நவீன கல்வி கல்வி பெற்றவர்களது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று எண்ணும் அனைவரும் தமது ஜாதி அமைப்புகள் வாயிலாக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை குறித்து யோசிக்க வேண்டும்... ஒரு கல்வி நிறுவனத்தின் சிறப்பு அதன் கட்டிடங்களிலோ, பேருந்துகளிலோ இல்லை. அந்நிறுவனத்தின் மனிதவளத்தில் தான் உள்ளது. உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அவ்வளவு தான். ஆனால் திறமையான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு தலைமுறை மாணவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள். சென்ற தலைமுறையில் இந்த விஷயத்தில் மிக தெளிவாகி இருந்தார்கள். பல கிறிஸ்தவ நிறுவனங்கள் குடுமி... [மேலும்..»]

பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]

March 21, 2012
By

பெரியவர்கள் ஒரு மணிநேரம் கூட செய்ய முடியாத வேலைகளை நாள் பூராவும் செய்யும்படி குழந்தைகள் திணிக்கப்படுகிறார்கள்... மாணவர்கள் சிறைச்சாலையில் இருந்ததாகவே நான் நினைத்தேன். அவர்களைக் கைதிகளாகத்தான் பார்த்தேன். ஏவலாட்கள் வேலையைத் தான் மாணவர்கள் செய்தார்கள். அவர்கள் மூளை வகுப்பில் இல்லை. பள்ளி என்பது முட்டாள்களைப் பழக்கும் இடமாகவே எனக்குத் தெரிந்தது. இது ஒரு கசப்பான உண்மை... கேள்வி கேட்கும் ஆசிரியர்கள் சரியான பதிலுக்காக மட்டுமே தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்... [மேலும்..»]

பள்ளிக்கல்வி – 1

March 5, 2012
By

இடைநிலைக்கல்வி போதிப்பவனாக சுமார் 35 ஆண்டுகள் இருந்ததால் பல உண்மைகளை உணர நேர்ந்தது. யதார்த்தமான சூழ்நிலைகளையும், அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் விஷயத்தில் புத்திசாலித்தனம், புத்திகூர்மை, அறிவுத்திறன் என்ற பதங்களை நாம்  குறிப்பிடுகிறோம்.  தேர்வுகளில்  நல்ல  மதிப்பெண்களை  பெறுவதையோ அல்லது  பள்ளியிலோ  கல்லூரியிலோ  சிறந்து விளங்குவதையோ  மட்டும்  இவ்வார்த்தைகள் குறிப்பிடமாட்டா. ஒருவன் வாழ்க்கையை  வாழும்  விதம்,  பல்வேறு மாறுபட்ட சந்தர்ப்பங்களில்,  புதிய சூழ்நிலைகளில், மிகக்குழப்பமான  நேரங்களில் அவன் நடந்து கொள்ளும் விதத்தையே  புத்திகூர்மை என்போம். நாம் எவ்வளவு  விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல; தெரியாத ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எப்படி நடந்து... [மேலும்..»]