Posts Tagged ‘ கல்வி சீர்திருத்தம் ’

பள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]

March 21, 2012
By

பெரியவர்கள் ஒரு மணிநேரம் கூட செய்ய முடியாத வேலைகளை நாள் பூராவும் செய்யும்படி குழந்தைகள் திணிக்கப்படுகிறார்கள்... மாணவர்கள் சிறைச்சாலையில் இருந்ததாகவே நான் நினைத்தேன். அவர்களைக் கைதிகளாகத்தான் பார்த்தேன். ஏவலாட்கள் வேலையைத் தான் மாணவர்கள் செய்தார்கள். அவர்கள் மூளை வகுப்பில் இல்லை. பள்ளி என்பது முட்டாள்களைப் பழக்கும் இடமாகவே எனக்குத் தெரிந்தது. இது ஒரு கசப்பான உண்மை... கேள்வி கேட்கும் ஆசிரியர்கள் சரியான பதிலுக்காக மட்டுமே தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்... [மேலும்..»]

பள்ளிக்கல்வி – 1

March 5, 2012
By

இடைநிலைக்கல்வி போதிப்பவனாக சுமார் 35 ஆண்டுகள் இருந்ததால் பல உண்மைகளை உணர நேர்ந்தது. யதார்த்தமான சூழ்நிலைகளையும், அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் விஷயத்தில் புத்திசாலித்தனம், புத்திகூர்மை, அறிவுத்திறன் என்ற பதங்களை நாம்  குறிப்பிடுகிறோம்.  தேர்வுகளில்  நல்ல  மதிப்பெண்களை  பெறுவதையோ அல்லது  பள்ளியிலோ  கல்லூரியிலோ  சிறந்து விளங்குவதையோ  மட்டும்  இவ்வார்த்தைகள் குறிப்பிடமாட்டா. ஒருவன் வாழ்க்கையை  வாழும்  விதம்,  பல்வேறு மாறுபட்ட சந்தர்ப்பங்களில்,  புதிய சூழ்நிலைகளில், மிகக்குழப்பமான  நேரங்களில் அவன் நடந்து கொள்ளும் விதத்தையே  புத்திகூர்மை என்போம். நாம் எவ்வளவு  விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல; தெரியாத ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எப்படி நடந்து... [மேலும்..»]

தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?

திறமையான மாணவர்களை மனப்பாட அடிப்படையிலான முதற்கட்டம் நீக்கிவிடுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான CBSE பள்ளிகள் முதற்கட்டத்தைத் தாண்ட இயலவில்லை... பொதுவாக மாணவர்களைச் சலுகைகளை எதிர்நோக்கும் சவலைக் குழந்தைகளாக்கி, ஆசிரியர்களை அரசியல்வாதிகளின் கூட்டணிக் கட்சிகளாக்கும் தி.மு.க-வின் தந்திரத்தினால்... [மேலும்..»]

ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்

September 5, 2010
By

பல நல்ல ஆசிரியர்கள் வெறுத்துப் போய் இந்த தொழிலை விட்டு வேறு நல்ல வேலைக்கு செல்ல விரும்புவதாகவே ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது... பல்கலைக் கழகங்களில் நியமனம் பெறுகிற பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் சாதி பார்த்தே நியமிக்கப் படுகிறார்கள்.... இன்னமும் பல இடங்களில் பெயர், முகம் வெளிப்படாமல், இன்றைய நிலையை நினைத்து மனதுக்குள் வெறுத்துப் போனாலும், விடாமல் தனது பணியை முடிந்தவரை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்... [மேலும்..»]

இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு

வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ பாதிரிகளும் இங்கு வந்து கல்வி சேவை செய்யாமலிருந்திருந்தால் இந்த மனுவாத பிராம்மணீய இந்து மதம் நம்மையெல்லாம் கல்வியறிவில்லாத மூடர்களாகவேதான் வைத்திருக்கும். இன்றைக்கு இந்த மண்ணின் கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது என்றால் அது கிறிஸ்தவமும் மிஷினரிகளும் போட்ட பிச்சை.... இது பல நேரங்களில் பல மேடைகளில் பேசிக் கேட்ட விஷயம்தான். ...... அவர்கள் சொல்வதில் என்ன தவறு என்றுதான் பெரும்பான்மையான ஹிந்துக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.....ஆனால், உண்மை என்ன என்பதைச் சிறிது ஆழமாக வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். [மேலும்..»]