Posts Tagged ‘ கல்வெட்டுகள் ’

கோயில்கள், சமூகம், பொது, வரலாறு

அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி

அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி

ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அதைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்... தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும்,... [மேலும்..»]

கலைகள், கோயில்கள், பயணங்கள், வரலாறு

ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

January 4, 2014
-
ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன.... கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன... சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே... [மேலும்..»]

அறிவிப்புகள்

கோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்

கோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்

ஜூலை-1 (ஞாயிறு)  அன்று ரீச் ஃபவுண்டேஷன் அமைப்பு,   கருத்தரங்கம் ஒன்றை கோவையில் நடத்துகிறது.  தமிழகத்தின் பாரம்பரியக் கோயில்களைப் பாதுகாத்தல்; சிற்பக்கலை, வரலாறு, கல்வெட்டுக்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும்  முறைகேடுகளை கவனப்படுத்துதல்  ஆகிய பணிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும்  அமைப்பு இது. தொல்லியல் துறை அதிகாரிகள்,  வரலாற்று அறிஞர்கள் வழிகாட்டுதலில் கலை ஆர்வலர்கள், களப் பணியாளர்கள் பங்கு பெறுகின்றனர். ஜூலை-1 (ஞாயிறு)  அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. கே.கே.மேத்தா அரங்கம், ஆர் எஸ் புரம், கோவை  (சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் அருகில்). அழைப்பிதழ்  இங்கே.  அனைவரும் வருக!... [மேலும்..»]

இலக்கியம், வரலாறு

ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

November 17, 2011
-
ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! என்ற கட்டுரையை தினமணியில் பால.கௌதமன் எழுதினார்.. அதற்கு வந்தது திராவிட இயக்க எதிர்வினை.. ஆயுதங்களில் தேவதை குடியிருப்பதாகக் கருதுவது தமிழர் மரபு. சிலப்பதிகாரம் வேட்டுவவரியில், ’வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு... மகாநவமி, விஜயதசமி விழா 5-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது... [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள்

ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?

ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?

(மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி) எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் போலக் காண முடியுமா? இத்தகைய “கடவுளால்" சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா?... கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்... இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொணரப் பட்டுள்ளது ... [மேலும்..»]

கேள்வி-பதில், நேர்காணல், வரலாறு, வீடியோ

திராவிட இனம் – வரலாற்று உண்மையா?

திராவிட இனம் – வரலாற்று உண்மையா?

திராவிட இனம் என்ற கொள்கைக்கு வரலாறு, அகழ்வாராய்ச்சி அடிப்படையில் ஆதாரங்கள் உள்ளனவா? திராவிடர்களுக்கு அவர்களது தனி அடையாளத்தை அளித்தவர் பிஷப் கால்டுவெல். அவரை ஏன் மோசமாக சித்தரிக்கிறீர்கள்? சமூகநீதியை வலியுறுத்துகிறது என்பதால் தானே திராவிட இயக்கத்தை எதிர்க்கிறீர்கள்? .. மேலும் சில கேள்விகள், விவாதங்கள் - வீடியோ வடிவில்... [மேலும்..»]

புத்தகம், வரலாறு, வைணவம்

ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2

April 8, 2011
-
ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2

கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மாண்டவர்களின் நினைவுச் சின்னம் இங்கே பதிவாகியிருக்கிறது, எந்தப் புரட்சி கோஷங்களும் இல்லாமல்...நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்கிறார் முதலியாண்டான். இங்கு பிராமணர் - பிராமணரல்லாதார் பற்றிய ஒரு 11ம் நூற்றாண்டு உரையாடல் பதிவு செய்யப் பட்டுள்ளதைக் காண்கிறோம்... திருவரங்கம் கோயில் விஷயத்தில் அத்தகையதொரு உணர்வினை உண்டாக்குவதில் கோயிலொழுகு நூலின் பங்களிப்பு மகத்தானது.. [மேலும்..»]

அனுபவம், வரலாறு, வைணவம்

ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1

April 7, 2011
-
ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1

கருங்கல் தூண்களை எப்போது கிரானைட் போட்டு மறைத்தார்கள், அந்த மகா ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் கூட வந்த பெரியவர்... அரங்கனைப் பார்த்தவுடன் அதில் மூழ்கி நாம் திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் தத்தளித்து விடுவோம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க இந்தத் தூண் பற்றுதலாம்... ஆறாயிரத்துச் சொச்சம் பக்கங்களில், ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார். [மேலும்..»]

இந்து மத மேன்மை, வரலாறு

இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்

இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்

இலங்கையில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது... இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்... கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும்... இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.. [மேலும்..»]

சமூகம், புத்தகம், வரலாறு

சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்

சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்

நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன... ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்... உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள்... [மேலும்..»]