Posts Tagged ‘ கள்ளுண்ணாமை ’

திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்... இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்... பூவுக்கு முள் முரண்...நீருக்கு நெருப்பு முரண்... இரவுக்குப் பகல் முரண்... சூரியனுக்கு நிலவு முரண்... உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது... அதுபோலவே முரண்களாலும் ஆனது... அறங்கள் முரண்படவில்லை... இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே... [மேலும்..»]

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” -என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]