நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது… சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்… தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?

View More நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!

காம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு என்னும் நிலையிலிருந்து திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல் என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும் அதன் அடுத்த கீழ்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமாக அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரத பண்பாட்டில் ஏற்படவே இல்லை.

View More ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!

போகப் போகத் தெரியும்-16

தமிழர் என்ற சொல் இந்து என்ற பொருளில் ஆனந்தரங்கப் பிள்ளை டயரியில் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். இது கால்டுவெல் காலத்திற்கு முற்பட்ட நிலை. இப்போதும் தஞ்சை மாவட்டத்தில் ‘அவர் தமிழர்; முஸ்லீமோடு வியாபாரம் செய்கிறார்’ என்று சொல்கிற பழக்கமிருக்கிறது…

View More போகப் போகத் தெரியும்-16

கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

சொல்லுள் துலங்கும் மெளனத்தில்
சொக்கிப் போய்நாம் நிற்பதனால்
அல்லை ஒளியின் கருவென்று
அதில்நின் றேநாம் கண்டதனால்
புல்லே மரமாய் மலைக்கின்றோம்
புவியே மலராய் நுகர்கின்றோம்
எல்லை பொய்யோ மெய்தானோ?
இன்னும் எதற்கு இவ்வாதம்?

View More கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

கவிதை: குருநாதன்…

நித்திரைக்கும் பிரக்ஞைக்கும்
நேரத்தில் வசப்படாத
ஒத்திகையால் தாண்ட
ஒண்ணாத ஒருகோட்டில்
சத்திரத்துத் திண்ணையிலே
சாய்ந்துறங்கும் முதியோன்போல்
அத்தனவன் என்னுள்ளே
அரிதுயிலாய்க் கவர்கின்றான்!

View More கவிதை: குருநாதன்…

விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

மீண்டும் எழுவாய்
இது உறக்கம்தான் மரணமல்ல
புது வாழ்வில் விழித்தெழும்
துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன்
கமலமலர் விழிகளின் சிறு அயரல்
ஓ சத்தியமே!
உன்னை வேண்டி நிற்கும் உலகம்
உனக்கென்றும் அழிவில்லை

View More விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

கருணைக் கணபதி

பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி
பக்தி செய்வோரைப் பரிபாலிப்பான்
கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான்
கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான்.

View More கருணைக் கணபதி

அவர்-அவன்

பேர்சொல்லப் பிள்ளையும் பேரனும் பேத்தியும்
பெற்றதில் பெருமை கொண்டார்.அவன்
பாருக்குள் நற்றமிழ் நாட்டினை விட்டிட
‘போர்’என்று புலம்பி நின்றார்…

வாய்ப்புள்ள போதெல்லாம் பேசிக் கொள்வார்.அவர்
வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வார்
‘வாய்ப்’பினில், ‘சாட்’டினில் தம்மக்கள் பெருமையை
வாயாறப் பீற்றிக் கொள்வார்…

View More அவர்-அவன்