கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை

தேசத்தை நேசிப்பதாகச் சொல்ல்லும் நீங்கள் தேசத்தை உடைப்போம் என்று சொல்லும் இஸ்லாமிய மாவோயிஸ பயங்கரவாதிகளைப் பற்றி ஏன் எதுவும் சொல்வதில்லை;அஃப்சல் குரு போன்ற பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களை எதிர்த்து எதுவுமே நீங்கள் ஏன் பேசுவதில்லை என்ற கேள்விக்கும் சரியான பதில் கமலிடம் இல்லை… ஸ்மிருதி இரானிக்கும் கமலுக்கும் இடையிலான மோதல் என்பதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்ந்து அடிவாங்குவது பொறுக்காமல் அவரை அடித்து வந்த அர்னாபே ஒரு கட்டத்தில் ஸ்மிருதியுடனான பேட்டி என்பதுபோல் அதைக் கொண்டு செல்லவேண்டிவந்துவிட்டது. கமல் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். .. மொத்தத்தில் எளிதில் மடக்க முடிந்த பல்வேறு ஓட்டைக் கருத்துகளுடன் போலி அறிவுஜீவிப் பிம்பத்துடன் வலம் வந்துகொண்டிருக்கும் கமல் சாரிடம் (இப்போது அபாய அரசியலை முன்னெடுக்கும் அயோக்கியனாகவும் ஆகத் தொடங்கியிருக்கிறார்) தமிழிலும் இதுபோல் பேட்டிகள் எடுக்கவேண்டும். ஒருவகையில் இந்த ஆங்கிலப் பேட்டி கூட கொஞ்சம் மிதமானதுதான்…

View More கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை

சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்

சீக்கியர்களை கண்ட இடங்களில் கொலை செய்யுங்கள். அவர்களின் சொத்துக்களும் பெண்களும் உங்களுக்கு இலவசம். ஒவ்வொரு தலைக்கும் என்னிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொக்கரித்தனர் இந்த காங்கிரஸ் தலைவர்கள். கலவரக்காரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் நிதி ஆதாரம் மற்றும் சாராயம் ஆகியவை காங்கிரஸ் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சீக்கியர்கள் பதுங்கி இருக்கும் வீடுகளை காட்டவும், எங்கே அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதையும் சொல்ல அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவி நாடப்பட்டு செய்யப்பட்டது…இந்த வழக்குகளை விசாரிக்க மார்வா கமிஷன் தொடங்கி நானாவதி கமிஷன் வரை பத்து கமிஷன்களை அமைத்து தங்கள் கொலைத் தடங்களை அழித்து நீர்த்து போக செய்ய காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்து சாதித்து விட்டது. அப்பாவி சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை…

View More சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்

மண்குடமும் பொன்குடமும்

கண் முன் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டடனர். அப்படியானால், தினகரன் அலுவலகம் தன்னைத் தானே எரித்துக்கொண்டதா?… பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கலவரங்களில் சீக்கியர்கள் 2700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்… ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் வழக்குகள் தொடுப்பதும், ஆட்சி மாறியவுடன் அவை கைவிடப்படுவதையும் தமிழக மக்கள் தாராளமாகவே கண்டு வருகின்றனர்… குஜராத் நீதிமன்றங்களையே சந்தேகக் கண்ணுடன் விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்போது அமைதியாக இருப்பது ஏன்?… வழக்குகள் மீது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படும் மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.

View More மண்குடமும் பொன்குடமும்

வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

இஸ்லாத்துக்கு எதிரானது என்ற இந்த ஆயுதம் அவ்வப்போது முஸ்லீம் மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் தம் அதிகார பலத்துக்காக, பயன்படுத்துவது தான். இந்தியாவின் சமீப கால சரித்திரத்தில் இது முதலில் எழுந்தது 1923-ல். இதிலிருந்து அவ்வப்போது சில முஸ்லீம் தலைமைகள் வந்தேமாதரம் பாடலைச் சாக்கிட்டும் சில முஸ்லீம் அறிஞர்கள் அதை மறுத்தும் வந்திருக்கின்றனர். ஆனால் கையோங்கியது, குரல் ஓங்கியது வந்தேமாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்ற குரலே.

View More வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

பாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்… லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர்.

View More லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

இந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா?

தனது கணவரின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மறைந்த கர்கரேயின் மனைவி சொன்னது மட்டுமல்லாது, தன் கணவர் திக் விஜய் சிங்கிடம் பேசினார் என்பதையும் அவர் மறுத்த பின்பும், சிங் மறுபடியும் அவரது கூற்றை நியாயப்படுத்த முயல்கிறார் என்றால் அவர் வேறு ஏதோ எண்ணத்துடன்தான் செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமே.

View More இந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா?