மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!

இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் செயலற்ற தன்மை மீதான மக்களின் கோபமே காரணம் என்றாலும், அதை வாக்குகளாக மாறியது தான் மோடியின் அசுர சாதனை. கண்டிப்பாக மோடியின் இடத்தில் அத்வானி உள்ளிட்ட வேறு எவர் இருந்திருந்தாலும், இத்தகைய இமாலய சாதனையை நிகழத்தியிருக்க முடியாது…. மோடியின் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் திட்டமிட்டு நடத்தியது பாஜகவின் நிகரற்ற சாதனை…. விலைக்கு வாங்கப்படும் ஊடகங்களைக் கொண்டு அரசியல் நடத்திவந்த காங்கிரஸ் கட்சியால் பாஜக வெகுவாக பாதிக்கப்பட்டுவந்தது. அந்நிலையும் இம்முறை மாறியது. காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலை ஊடகங்களின் காங்கிரஸ் ஆதரவுப் போக்கிற்கு கடிவாளமானது…. சுயநல நாட்டம் மிகுந்த அரசியல்களத்தில் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை இணைத்து, ஓரணியாகக் கொண்டுசெல்வது மிகவும் கடினமானது. அதை சங்கமே சாதித்தது….

View More மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

1984-க்குப் பிறகு இந்திய அரசியலில் நிலவிய குழப்பமான, அரசியல் எண்ணிக்கை விளையாட்டுக்கு வழிவகுத்த சூழல் இத்தேர்தலில் காணாமல் போயிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் சிறு கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையையும், பாஜகவின் மகத்தான வெற்றி மாற்றி அமைத்திருக்கிறது…. மக்களிடம் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்து வென்று, பிறகு மக்கள் முதுகில் குத்துவது போல காங்கிரஸை ஆதரித்துவந்த பல கட்சிகளுக்கும் இத்தேர்தல் ஆப்பு வைத்துவிட்டது… இஸ்லாமியர்களும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்து, தங்கள் மீதான அபவாதத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கிற்கு இத்தேர்தல் முடிவு கண்டிருக்கிறது…

View More மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

விஷவிதை தூவும் காங்கிரஸ்

தோல்விமுகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதையாவது செய்து மீடேற வேண்டும் என்ற துடிப்பில்…

View More விஷவிதை தூவும் காங்கிரஸ்

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத்…

View More யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!

எண்ணியிருந்தது ஈடேறுகிறது! தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய…

View More தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!

மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி

மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்… 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்….தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக காட்சியளிக்கும் இடதுசாரிகளின் நிலை கேவலமாகவே காட்சியளிக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் முதல்வர் என பிரகடனப்படுத்தியுள்ள அ.தி.மு.கவை முழுமையாக நம்ம முடியுமா என்பது தெரியவில்லை….

View More மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி

ராகுல் காந்தியின் காமெடி பேட்டி

ராகுல் காந்தி கூறியிருப்பது போல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவில்லை. ஆ.ராசா பதவியை ராஜினாமா செய்த வரலாறு ராகுல் காந்திக்கு தெரியவில்லை. பாராளுமன்றம் முடக்கப்பட்டதும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னர், நீதி மன்றம் தெரிவித்த கருத்தின் காரணமாகவும் பதவியை ராஜினாமா செய்தார் என்பது உலகறிந்த உண்மையாகும்…. ராகுல் காந்தி அவர்களே, தாங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு மோடி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். தாங்கள் 1984-ல் டெல்லில் நடந்த கலவரத்திற்கு தாங்கள் பகிரங்க மன்னிப்பு கோருவீர்களா என்ற கேள்விக்கு பதில் வேடிக்கையாக அமைந்த்து…

View More ராகுல் காந்தியின் காமெடி பேட்டி

1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984ல் தில்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்ட “கலவரங்களும்”,  2002ல் குஜராத்தில் கோத்ரா…

View More 1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்

அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தில்லியில் எதிர்பாராத வெற்றியை அறுவடை செய்ததன் மூலமாக,…

View More சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்

அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு…. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது….

View More அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்