Posts Tagged ‘ காடு ’

பிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்

பிஷ்னோய் பழங்குடியினர் மான்களையும், எருமைகளையும், குரங்குகளையும் பிற அரிய விலங்குகளையும் மட்டும் பாதுகாக்கவில்லை, மரங்களையும் உயிரினும் மேலாக பாதுகாக்கிறார்கள். உலகின் ஆதி சுற்றுச் சூழல் போராளிகள் பிஷ்னோய்களே. கஜோரி என்றொரு வகை மரம் அங்கு புனிதமாகக் கருதப் படுகிறது. அது பஞ்ச கால மரமாகக் கருதப் படுகிறது. கடும் பஞ்ச காலத்திலும் கூட அதன் மரப் பட்டைகளைத் தின்று உயிர் பிழைத்து விடலாம்... ஒரு முறை ஒரு கஜோரி மரத்தை வெட்டுவதற்காக மன்னன் படைகளை அனுப்பி வைத்த பொழுது முதலில் எங்களை வெட்டி விட்டு மரங்களை வெட்டுங்கள் என்று அந்த மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மன்றாடியுள்ளார்கள்.... [மேலும்..»]

நிலமென்னும் நல்லாள்

December 17, 2013
By

தண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்?” ப்ருது மனம் தெளிந்தான்... சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்? என்று வேண்டினான். அவர்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக, மரங்களின் மகளான மாரீஷாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்... நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்.... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10

தாங்கள் சித்திரகூட மலைச்சாரலில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து அனைவரும் அங்கு ஒருமுறை வந்துவிட்டதால், அது தெரிந்து அயோத்தி மக்கள் பலரும் அவ்வப்போது அங்கு ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு வந்தால், அது வரும் வழியில் உள்ள பல தபஸ்விகளுக்கும் இடையூறாக இருக்கலாம் என்பதால் இராமர் அங்கிருந்து வேறு இடத்திற்குப் போகலாம் என்று தீர்மானித்தார். அப்படி அவர்கள் போகும் வழியில் அத்ரி மகரிஷியையும் அவரது பத்தினி அனசுயாவையும் சந்தித்தார்கள். ஏழையானாலும், செல்வந்தன் ஆனாலும் எப்போதும் கணவனுடனேயே இருப்பேன் என்று திருமணம் புரிந்துகொள்ளும்போது செய்த சத்தியத்திற்கு ஏற்ப, நாடானாலும் காடானாலும் இராமருடன் தங்கி வாழும் சீதையின் முடிவை வரவேற்று அனசுயா பெருமையாகப் பேசினாள்.... [மேலும்..»]

கம்பனின் சித்திரகூடம்

June 15, 2012
By

பெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது... கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா?".. [மேலும்..»]

சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்

January 27, 2011
By

பேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்... ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா? [மேலும்..»]

ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

August 31, 2010
By

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது... விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்... சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது... இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது... [மேலும்..»]

அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை

மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பங்களாதேஷிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்றே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். முஸ்லிம்களைப் பகைத்துக்கொண்டால் சிறுபான்மையினரின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம் அரசியல் கட்சிகளுக்கு- குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு- உள்ளது. இதனால் காங்கிரஸாரின் ஆதரவுடன் பங்களாதேஷிகள்.... இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. வாக்குவங்கி சார்ந்த பயமும் ஓரு முக்கிய காரணமாகும். [மேலும்..»]

திரைப்பார்வை: அவதார்

ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட 'ஆஹா'க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம். [மேலும்..»]

காடென்னும் கடவுள்

காடென்னும் கடவுள்

சொந்த வீட்டில் எங்கள் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட மரங்களை இழந்ததற்காகச் சிறுவயதில் வருந்தாத நான், பெங்களூரில் சாலைகளை விரிவாக்குவதற்காகச் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வலியை உணர்கிறேன்... "எப்படியாவது இந்த மரங்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை!" என்று ஊர்மக்கள் அனைவரும் ஒரேகுரலில் சொல்கின்றனர். அய்யாசாமி மாவட்ட நிர்வாகத்துக்குக் கூட ஒரு புகார் மனு அளித்திருப்பதாகக் கூறுகிறார். [மேலும்..»]