உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21

தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.
அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.

View More உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21

சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20

பசி இருக்கும் வரையில்தான் குற்றங்கள் இருக்கும். குற்றங்கள் அதிகரிக்கும்போதுதான் சிறைக்கோட்டங்கள் தேவைப்படும். அந்தப் பசியைப் போக்கிவிட்டு, குற்றங்களைக் குறைத்துவிட்டால், பிறகு சிறைக்கோட்டத்திற்குத் தேவை என்ன இருக்கப்போகிறது, மன்னா? எனவே இப்போதுள்ள இந்தப் பெரிய சிறைக்கோட்டத்தை இடித்துத் தள்ளிவிட்டு, ஒரு மிகப்பெரிய அறக்கோட்டத்தைக் கட்டுங்கள்!

View More சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20

உலக அறவி புக்க காதை — மணிமேகலை 18

‘அடி பாவி! எத்தகைய தன்மையுடைய நாவல் பழத்தை இப்படிச் சிதைத்துவிட்டாய் என்று உனக்குத் தெரியுமா? சாதாரணப் பழமில்லை இது. தெய்வத்தன்மை வாய்ந்தது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கனியும் இந்த அரிய கனியை உண்பவர்களுக்குப் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பசி ஏற்படாது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கனியை உண்டு மற்ற நேரங்களில் தவம்புரிபவன். அப்படிப்பட்ட கனியை நாசம்செய்து என் தவத்தை நாசம் செய்துவிட்டாயே, பாவி! வானில் பறந்து செல்லும் உன்னுடைய ஆற்றல் செயலற்றுப் போகட்டும். யானைத்தீ என்று அழைக்கப்படும் கடும்பசி நோயால் நீ பனிரெண்டு ஆண்டுகள் அவதிப்படு. மீண்டும் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து நான் இதே போன்ற நாவல் கனியை உண்ணும்போது உன் பசிப்பிணி இளம்பெண் ஒருத்தியால் தீரட்டும்’

View More உலக அறவி புக்க காதை — மணிமேகலை 18

பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

துறவின் மிகக்கடினமான செயல், தான் என்பதை அறவே துறந்து, பசிக்கு உணவுவேண்டி, வேற்று இல்லத்தின்முன் நின்று, அம்மா உணவளியுங்கள் என்று அழைப்பதுதான். மாதவியின் கண்களில் நீர் நிறைந்தது. தான் பிச்சை எடுக்கிறோம் என்ற நினைப்பு மணிமேகலை முகத்தில் சிறிதும் இல்லை. மாறாக முகத்தில் புன்னகை மலர, “அம்மா! பத்தினிப் பெண்கள் இடும் பிச்சை, பெரும்பிச்சைகளில் சிறந்த பிச்சை. புண்ணியவதி. சோறு போடம்மா” என்று வேண்டிநின்றாள்.

View More பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16

பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)

ஏன் மணிமேகலை என்ற கேள்வி எழலாம். மணிமேகலை ஒன்றுதான் அது வாழ்ந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்த காவியம். குறிப்பாகப் பெண்களின் நிலையையும், பெண்களை வெறும் உடலாகவே பார்க்கும் ஆடவர்களின் தன்மையையும் அறச்சீற்றத்தோடு எடுத்துச் சொல்கிறது. இது புத்த மதத்தின் சிறப்பைச் சொல்லவந்த காவியம்.. பண்டித மொழியிலும் இல்லாமல், கொச்சையாகவும் இல்லாமல் –ஆங்கிலத்தில் readability என்பார்கள்-அப்படியொரு வாசிப்புத் தன்மையான நடையில் மணிமேகலையை எழுதலாம் என்று இருக்கிறேன். கதைப் போக்கில் தடங்கல் இருக்காது எனினும் சில மௌன இடைவெளிகளில் என்னுடைய கருத்துக்களைச் சேர்த்து கதை சொல்லப்போகிறேன்… அகத்தியர் என்ற முனிவரின் மேற்பார்வையில் காவிரி தமிழ் நிலத்தில் பாயும் செய்தி சொல்லப்படுகிறது. சம்பாபதி என்ற பெண்தெய்வம் காவிரியைவிட வயதில் மூத்தவள் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பாபதி என்ற தெய்வம் மேருமலையை விடுத்து தென்திசைப் புலம் பெயர்ந்த குறிப்பும் உள்ளது. இதன் காரணமோ, பின்னணியோ கூறப்படவில்லை…..

View More பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)