Posts Tagged ‘ காலனியம் ’

அரசியல், சமூகம், புத்தகம், வரலாறு

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் 'தலித்' (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்... இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது... பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில்... [மேலும்..»]

அரசியல், சமூகம், புத்தகம், வரலாறு

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

கொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும் - இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா பறையர்கள் தெய்வமாக்குவார்களா?... தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு... [மேலும்..»]

சமூகம், தேசிய பிரச்சினைகள், பொது, வீடியோ

இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை

May 20, 2015
-
இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை

இந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? - இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்... [மேலும்..»]

இலக்கியம், சமூகம், வரலாறு, விவாதம்

புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்.... தலித்துகளிடையே அயோத்தி தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால்... [மேலும்..»]

இலக்கியம், சமூகம், வரலாறு, விவாதம்

புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1

புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1

இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது... பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது... சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு... [மேலும்..»]

இலக்கியம், சமூகம், வரலாறு

அழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானை

December 5, 2013
-
அழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானை

1876 முதல் 1900 வரையிலான பஞ்சங்களில் மட்டும் 2 கோடியே 60 லட்சம் மரணங்கள். மறைந்து போனவர்களில் பெரும்பகுதியினர் இந்திய சமூக அடுக்கின் கீழ்த்தட்டில் இருந்த சாதிகளை, தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.... இந்த நாவலை வாசிக்கும் எவரையும், அதன் சம்பவங்களும், உக்கிரமான கணங்களும், உணர்ச்சிகளும் அதிர வைக்கும். நெஞ்சழிய வைக்கும். இந்தியர்களின், சாதி இந்துக்களின் மனசாட்சி செத்து சுண்ணாம்பாகி உறைந்து கிடந்தது என்ற முகத்தில் அறையும் உண்மை வாசகர்களை நிலைகுலையச் செய்யும். இந்த நாவலை முன்வைத்து, இந்துத்துவர்களாகிய நாம் நம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் உள்ளன... ஜெயமோகனின் பல படைப்புகளில் வரலாற்றுச் சமநிலை உண்டு.... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், நாடகம்

விதியே விதியே… [நாடகம்] – 7

விதியே விதியே… [நாடகம்] – 7

இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, இன்றைய ராஜபக்சே வரை அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்தர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டவர்கள். தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள். சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன... கிறிஸ்தவன் தான் ஆண்ட நாடுகளை வெறுமனே விட்டுவிட்டுச்செல்லவில்லை. நல்லிணக்க நன்னீர் கிணறுகளில் ... [மேலும்..»]

சினிமா

’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை

March 20, 2013
-
’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை

அடிப்படையில் இது சபிக்கப் பட்ட மானுடர்களின் வலியைப் பேசும் திரைப்படம். பசியின் வலி. அடக்கு முறையின் வலி. வேர் பிடுங்கப் பட்டு ஊரைத் துறந்து பிழைப்பு தேடச் செல்வதன் வலி. அடிமைத் தனத்தின் ஊமை வலி.. டாக்டரும் வெள்ளைக்கார மனைவியும் ஏசு பாட்டுக்கு குத்துப்பாட்டு நடனம் ஆடுகிறார்கள். ரொட்டிகளை வீசியெறிகிறார்கள். தொழிலாளர்கள் முண்டியத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்குகிறார்கள்... கொள்ளை நோய்களின் போது கிறிஸ்தவ பாதிரிகள் – டாக்டர்கள் கூட்டணி எப்படி நடந்து கொண்டது என்பது பற்றி அவர்களே எழுதி வைத்த பல பிரிட்டிஷ் காலகட்டத்திய குறிப்புகள் உள்ளன.... [மேலும்..»]

சினிமா

உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்

உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்

வாஸ்கோட காமா கடல் வழி கண்டுபிடித்த கனவான் அல்ல; அவன் ஒரு கிறிஸ்தவ மதவெறி பிடித்த கடற்கொள்ளையன் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய திரைப்பட வரலாற்றில் துணிச்சலான ஒரு முயற்சியே... ஆக்கிரமிப்பாளனுக்கு உதவும் அரவாணி அமைச்சரின் துரோகச் செயல்கள் சுதந்திர இந்தியாவிலும் அரசியல் வாதிகளால் தொடர்வதை குறியீடாக காட்டி இருப்பது அற்புதம்... பல காட்சிகள், ஒளிப்பதிவு நுட்பத்துக்கான முன்மாதிரிகளை உருவாக்கி உள்ளன. உருமி ஒவ்வொரு முறை சுழலும்போதும் காமிராவும் அழகாகச் சுழல்கிறது.... [மேலும்..»]

அறிவிப்புகள்

கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்

கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்

நாள்: 25-02-2012, சனிகிழமை பிப்-25, சனிக்கிழமை மாலை 7 மணி. ராயா மகால், காந்தியடிகள் சாலை. பேராசிரியர். சாமி. தியாகராஜன், திரு. கிருஷ்ண பறையனார், திரு.ம. வெங்கடேசன் (எழுத்தாளர்), திரு. ம. ராஜசேகர் (வழக்குரைஞர்), திரு. B.R. ஹரன், (பத்திரிக்கையாளர்) திரு. அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்) கலந்து கொள்கின்றனர்... [மேலும்..»]