பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

தமிழ்நாட்டின் ஒரு மிக முக்கிய இந்துத்துவ சிந்தனையாளர் தனி உரையாடலில் ‘பெரியார் அன்றைக்கு இந்த மண்ணுக்கு ரொம்ப தேவையாக இருந்தாரப்பா… அவரும் நம்ம சமுதாயத்தை நேசித்தவர்தான்.’ என்றார். ஒரு ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்பு வெளியிட்ட தேசபக்தர்கள் மகான்கள் பிறந்த நாட்கள் நினைவு நாட்கள் பட்டியலில் ஈ.வே.ராமசாமி பெயரும் இருந்தது. சூழ்நிலை புரிந்திருக்கும். இத்தகைய சூழலில்தான் ”ஈ.வெ.ராவின் மறுபக்கம்” என்ற இந்த புத்தகம் வெளியானது. இன்றைக்கு ஈ.வே.ராமசாமியை எவராவது இந்துத்துவர் ‘பெரியார்’ என்றால் அது பழக்க தோஷமாக மட்டுமே இருக்கும். இந்த நூலை எழுதியவர் நிச்சயமாக திராவிட இயக்க வரலாற்றில் ஊறித் தோய்ந்து போன ஒரு பெரிய வரலாற்றாராய்ச்சியாளராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை. அவர் ஒரு இளைஞர்….இன்றைக்கு நாம் ‘taken for granted’ என எடுத்து கொள்ளும் சாதாரண அடிப்படை உரிமைகள் கூட எப்படி போராடி வெல்லப்பட்டன என்பதை இந்த நூல் வெளிக் கொணர்கிறது. நீதிகட்சியின் பிம்பத்தை உடைக்கும் அதே நேரத்தில் ஹிந்து சமுதாயத்தின் வரலாற்றில் இருக்கும் இருண்ட பக்கங்களையும் நம் முன் நிறுத்துகிறார் ம.வெங்கடேசன்….

View More பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்

இதை சொன்னவர் யார்? ஊகிக்க முடிகிறதா? “இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு கூரைகளிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம் புதிய வழக்கமாகிவிட்ட போலி மதச்சார்பின்மையை கூவிக் கொண்டிருக்கும் போது தேசத்தின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டு கஷ்டப்பட்டு கடும் முயற்சியுடன் உழைப்பவர்கள், அதை குறித்து மனநேர்மையுடன் சிந்திப்பவர்கள் ஆர்,எஸ்,எஸ்ஸையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் சேர்ந்த இளைஞர்கள்தான்….”

View More ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்

மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

“செலவு? நம்மை போல வளரும் நாட்டின் பொருளாதாரத்துக்கு முடியுமா? அதுவும் அமெரிக்கா விதித்த தடைகள் எல்லாம் இருக்கின்றனவே”…. ”அதையெல்லாம் கவலைப்படாதீர்கள். இந்திய தொழில்நுட்பத்தால் அதிசயங்களை செய்ய முடியும். அரசு முழுமையாக துணை செய்ய வேண்டும்”…. சர்வ சிக்க்ஷா அபியானுக்கும் சந்திரயானுக்கும் இன்றைக்கு மங்கல்யானுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது இந்த செயல்திட்டங்களின் சிக்கனம் சார்ந்த செயல்திறமை. இயல்பாக நம் பண்பாட்டில் ஊறியது அது. … பாரதத்துக்கும் எனவே இந்துத்துவத்துக்கும், எதிராக மார்க்ஸியர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடன் கை கோர்ப்பதென்பது வரலாற்றில் எப்போதும் நடக்கும் துரோகம்தானே!

View More மங்கல்யானும் மறக்கப்பட்ட மனிதர்களும்

ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…

ஏனெனில் இது மூத்தார் வழிபாட்டு மனநிலை அல்ல… திராவிடமெனும் முற்றிய இனவாத மனநோய்… ஜெயமோகனின் கருத்தில் ஆர் எஸ் எஸ் சதியை கண்டுபிடிக்கும் அ.மார்க்ஸ் மூத்தார் வழிபாட்டு மன உணர்விலிருந்து அதை பேசவில்லை. ’இதை ஏன் தேவபாடைக்கு ஜெயமோகன் சொல்லக்கூடாது?’ என அறைகூவலிடும் சித்தாந்தவாதி இதை மூத்தார் மனநிலையிலிருந்து முழங்கவில்லை. இந்த மனநோயின் மூலகர்த்தா ஈவேராமசாமியே தான்…. ஈவேராவின் பகுத்தறிவு நமக்கு சொல்லி தந்தது எந்த கருத்தாக்கத்திலும் எந்த பாரம்பரிய வெளிப்பாட்டிலும் இன-வாத சூழ்ச்சிகளை கண்டுபிடிக்கத்தான். அதைத்தான் இன்றைக்கு அவர் வழி வந்தோர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்….

View More ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…