புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்…. தலித்துகளிடையே அயோத்தி தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார்… இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது….

View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை. வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை! சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை!

View More ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]

தோள்சீலைக் கலவரம் நடக்கத் தூண்டிய சமூக-பொருளாதார-அரசியல்-காலனிய நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மிகுந்த ஆதாரத்துடன் ஆசிரியர்கள் அடுக்குகின்றனர்… ஏன் இப்படி ஒரு பொய்யான சித்திரத்தை கட்டமைத்தார் கால்டுவெல்?… ஒசரவிளையில் அமைந்துள்ள இந்த லிங்கஸ்தானமே ஐயா வைகுண்டர் தர்மயுக அரசாட்சி நடத்துதற்குரிய அரியாசனம் எனக் கருதப்படுகிறது… சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் குறித்து ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்துக்கு இருக்கும் புறக்கணிப்பு நிலையைப் பயன்படுத்தி தேச விரோத சக்திகள் அவர்களது உரிமைக்காகப் போராடுவது போல, அவர்களை தங்கள் இந்திய விரோத நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

View More தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]

போகப் போகத் தெரியும்-15

இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எணணங்கள் மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறித்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்குணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதன் முதற்கட்டப் பணியாகத் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார். அவருக்கு முன்னர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்க திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

View More போகப் போகத் தெரியும்-15