
இந்தியாவின் கோவா பகுதியை ஆண்ட போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்களால் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்தர்கள் போன்றவர்களின் மதவழிபாட்டு உரிமையை அழித்தொழித்து, அவர்களைக் கிறிஸ்தவர்களாக கட்டாய மதமாற்றம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘இன்குசிஷன் (Inquisition)’ என்னும் கொடூரமான வழக்கம் 1560-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொடூரமான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாற மறுத்த பலர் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். துரதிருஷ்டவசமாக இந்தியர்களுக்கு, முக்கியமாக ஹிந்துக்களுக்கு அது குறித்தான அறிவு சிறிதும் இல்லாமல் இருப்பது கண்கூடு. அந்தக் கொடூர காலகட்டத்தைக் குறித்து இங்கு சிறிதளவு அறிவினைப் புகட்டுவதே இந்தத் தொடரின் நோக்கமாகும்…
Read more →