Posts Tagged ‘ கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் ’

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>  ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய  கிறிஸ்துமதச்சேதனம் தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண் பகுதி 1 பதிஇயல் மெய்யன்பர்களே! பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும்  இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின்  நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்! இந்தப்பகுதியில் பதியியலின் கடைசி இரு அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் கதை ஒன்பதாவது அத்தியாயமாகவும் திரித்துவம் பத்தாவது அத்தியாயமாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்... [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11

ஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக தம்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன! மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா? [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10

அனைவரது பாவங்களையும் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டதாகப் பைபிள் சொல்வதால் அவர் பெரும்பாவியாகி இருக்கவேண்டும். ஆகவே அவர் நரகத்திற்கே சென்றிருக்கவேண்டும். அவர் தமது மரணத்திற்குப்பின்னர் சென்றதாகவே அப்போஸ்தலர்களும் கூறுகின்றனர். ஆகவே சிலுவையில் மரணித்த இயேசு நரகத்திற்கு சென்றிருப்பார் என்பது உறுதி. சொர்க்கத்தில் இயேசு நுழையவில்லை மீட்சியையும் அடையவில்லை. எனவே அவர் எங்கும் நிறைந்தவராக இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இயேசு நரகத்தில் கிடந்து இடர்ப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கவாதங்களோ இல்லை. எனவே அவர் இன்னமும் நரகத்தில் கிடந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றார் என்றுதான் கருதவேண்டியிருக்கின்றது. [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>  ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் பகுதி 1 – பதிஇயல் இயேசுவின் ஜீவிதம் இயேசுவின் திருப்பலி அன்புக்குரிய நண்பர்களே! வணக்கம். கிறிஸ்தவர்களின் ஆண்டவராகிய ஜெஹோவா மற்றும் அவரது ஒரே திருக்குமாரனாகிய இயேசு ஆகியோருக்கு கிறித்தவப் பிரச்சாரகர்களால் இருப்பதாக கற்பிக்கப்படுகின்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றையும் பைபிளில் இருந்து தக்க ஆதாரங்களைக் சுட்டிக்காட்டி ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் நிராகரித்ததை கடந்த பகுதிகளிலே கண்டோம். இந்தப்பகுதியிலே கிறிஸ்தவத்தின் பாவவிமோசனமாக விடுதலைக்கு ஒரே வழியாக கற்பிக்கப்படுகிற இயேசுவின் திருப்பலி என்ற கோட்பாடு ஒரு புனைவு என்பதை எவ்வாறு ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் எவ்வாறு நிருபிக்கிறார் என்பதைக்காண்போம். ஓ... [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8

ஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை. நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது. ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம், "அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை," என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7

இயேசு ஆண்-பெண் கூடலினால் பிறக்கவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டால்கூட, அவர் ஒரு சிறப்பான மனிதர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே அன்றி ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்த அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது பைபிள் வசனத்திலிருந்து 1890 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு வாழ்ந்தகாலத்தில் உலகின் முடிவு நெருங்கிவிட்டதை அவர் சிலருக்கு உரைத்திருக்கிறார் என்பதும், அவர்களில் சிலர் நியாயத்தீர்ப்பு நாளையும் காண்பதற்கு உயிரோடு இருப்பார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிகிறது. இயேசு சொன்னதைக் கேட்டவர்கள் ஒருவராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா? இயேசு தான் கடவுள் அல்லர் என்பதை உணர்ந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவரது நாமத்தை கர்த்தர், கர்த்தர், இயேசு, இயேசு என்று... [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6

This gallery contains 1 photo.

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5

உங்கள் பரிசுத்தவேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் பல புத்தகங்களிலிருந்து போதுமான ஆதாரங்களோடு உங்கள் ஆண்டவராகிய ஜெஹோவாவின் தீயகுணங்களை ஒவ்வொன்றாக நிருபித்துள்ளோம். சொல்லாலும், செயலாலும், உணர்வாலும் அவர் தீமையின் உறைவிடமாக விளங்குகிறார் என்பதை இங்கே தெள்ளத்தெளிவாகக் கண்டோம். இன்னும் பைபிளில் காணப்படும் ஆதாரங்களை அடுக்கினால் எமது நூல் மிகவும் விரிவாக நீளும், ஆகவே இதுவே போதும். [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4

ஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே! அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா? தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா?... தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்? தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே?... [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3

தமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்?.... [மேலும்..»]