Posts Tagged ‘ கிழக்கு பதிப்பகம் ’

இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்... புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - கோட்சே குற்றவாளியா?... [மேலும்..»]

சிலைத் திருடன்: புத்தக அறிமுகம்

எவ்விதத் தகவல்களையும் நாம் சேமிக்காதது சிலைத் திருட்டை மிக எளிதாக்கி இருக்கிறது. சோழர் காலச் சிலைகளை விதவிதமாகக் கடத்தி இருக்கிறார்கள். மூலச் சிலைக்குப் பதிலாக அதே போன்ற போலிச் சிலையைச் செய்து வைப்பது, போலிச் சிலை இல்லாமலேயே மூலச் சிலையைக் கடத்திவிடுவது, பல சாதா சிலைகளைச் செய்து அவற்றோடு பழங்காலச் சிலைகளைச் சேர்த்துக் கடத்துவது, சிலைகள் மட்டுமில்லாமல் பழங்கால புராதன சின்னங்கள் எதுவானாலும் கடத்துவது, நேரடியாக தனக்குத் தேவையான ஊருக்குக் கடத்தாமல் பல நாடுகளுக்குச் சுற்றி எடுத்துச் சென்று கடத்துவது... இப்படிப் பல வகைகளில் கடத்துகிறார்கள்... இந்தியா போன்ற தனி மனித உயிருக்கு எவ்வித மரியாதையும்... [மேலும்..»]

நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்

ஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலமும் கூட... நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் - மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும்... ஆட்சி - அதிகாரம் - வரி வருமானம் - பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த... [மேலும்..»]

சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

December 4, 2017
By

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்..... [மேலும்..»]

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்

January 16, 2012
By

ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகப் படுகொலை செய்யப் பட்டதைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது, மரணங்கள் வெறும் புள்ளி விவரங்களாக ஆகி விட்ட நிதர்சனம் மனதைச் சுடுகிறது... கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.. 'திபெத்தில் எரிந்த நாலந்தா' அத்தியாயத்தைப் படித்து முடித்த போது, காட்டெருமையின் குளம்புகளில் சிக்கிக் கொண்ட குழந்தை என்ற வர்ணனை தான் மனதில் எழுந்தது... எல்லா சான்றுகளுமே கம்யூனிஸ்டுகளே வெளியிட்டுள்ள பல நூல்களில் இருந்தும், ரஷ்ய, சீன பதிப்புகளில் இருந்துமே தரப்பட்டிருப்பது... [மேலும்..»]

உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

இந்தப் புத்தகம் தேச ஒற்றுமையில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லாத அண்ணல் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு நன்றிக் கடனாக, தன்னுடைய சிறு முயற்சி என்றும் இந்தப் புத்தகத்தின் தேவை தீரும் நாளையே தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அரவிந்தன் குறிப்பிட்டார்... ஜோ டி குரூஸ் அன்று கச்சிதமாகப் பேசி அனைவரையும் நெகிழவைத்தார்... கம்பர் சேக்கிழாருக்கு அடுத்தபடியாக அரவிந்தன் நீலகண்டனைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் எஸ்.ராமச்சந்திரன்... அதிரடிக்குரலும் ஆர்ப்பரிக்கும் அலைபோன்ற தொடர் பேச்சும் வாள் வீச்சாக இருந்தது.... [மேலும்..»]

தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்

தமிழ்ஹிந்து இணையதளம் குறித்து ஒரு விளம்பரம்.. இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் - தமிழ்ஹிந்து பரிந்துரை.. கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு - அரவிந்தன் நீலகண்டனின் புதிய நூல்! ... இரண்டு நூல்கள் தான் இந்த வருடக் கண்காட்சியைக் கலக்கப் போகும் அரசியல்/சமூகவியல் புத்தகங்கள் என்று பல புத்தக நோக்கர்கள் ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்... விஜயபாரதம் அரங்கில் தமிழ்ஹிந்து வெளியீடுகள் கிடைக்கும்.. [மேலும்..»]

சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!

ஜனவரி-3, 2012 (செவ்வாய்) மாலை 6 மணி.. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பத்ரி சேஷாத்ரி, கிருஷ்ண பறையனார், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கல்வெட்டு எஸ்.இராமச்ச்சந்திரன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், டாக்டர் தியாக சத்திய மூர்த்தி, பேரா. சாமி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்... அழைப்பிதழ் கீழே! அனைவரும் வருக. ஆதரவு தருக! [மேலும்..»]

உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த "உடையும் இந்தியா?" நூல் வெளிவந்து விட்டது. அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தை செய்திருக்கிறார். நூல் குறித்து பத்ரி சேஷாத்ரியும் அரவிந்தனும் நிகழ்த்திய காரசாரமான உரையாடல் மூன்று பகுதிகளாக... ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின.. உலகளாவிய கிறிஸ்தவ மதமாற்ற வலை, "திராவிட கிறிஸ்தவம்" என்ற புரளி...தலித்களை இந்திய சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் சூழ்ச்சிகள். உலக அரசியலில் இந்தியாவை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதிவலைகள்.... [மேலும்..»]

சீனா – விலகும் திரை

நமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல... எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார். [மேலும்..»]