தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

தியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது… “வெறும் உடல்பலத்தால் என்னபயன்? உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்? சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் – காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா? கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா? ஆடு புல்தின்றால் அது உபவாசமா? வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?…”

View More தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”

View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா